» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியன் கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!

புதன் 20, மார்ச் 2024 5:04:17 PM (IST)

பாஜக கூட்டணியில் ஜான் பாண்டியனின் தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்துக்கு ஒரு மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மற்றும் தமிழக மக்கள் முன்னேற்ற கழக தலைவர் ஜான் பாண்டியன் ஆகியோர் தொகுதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர். பாஜக தலையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் டிடிவி தினகரனின் அமமுக 2 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து, ஜான் பாண்டியனுக்கு ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது.

மக்களவைத் தேர்தலில் சூழ்நிலையை பொறுத்து தான்ன் போட்டியிடுவது குறித்து முடிவு செய்யப்படும் என ஜான்பாண்டியன் ஏற்கெனவே கூறியிருந்தார். இதனால், ஜான் பாண்டியனின் மகள் வினோலின் நிவேதா தேர்தலில் போட்டியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads


Arputham Hospital










Thoothukudi Business Directory