» செய்திகள் - விளையாட்டு » தமிழகம்

வன்னியர்களுக்கு 10.5% உள்ஒதுக்கீடு: தமிழக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றம்

வெள்ளி 26, பிப்ரவரி 2021 4:21:07 PM (IST)

மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதா சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

அரசு கல்வி மற்றும் நிறுவனங்களின் வேலை வாய்ப்பில், மிகவும் பிற்படுத்தப்பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்ட மசோதாவை தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி இன்று தாக்கல் செய்தார். மேலும், சீர்மரபினருக்கு 7 சதவீத தனி இட ஒதுக்கீடு வழங்கவும் மசோதா தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இரண்டு மசோதாக்களும் சட்டப்பேரவையில் இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது. இதன் மூலம் எம்பிசி இட ஒதுக்கீட்டுப் பிரிவில் எம்பிசி-வி என்ற உள்பிரிவு உருவாக்கப்பட்டு, அதன் மூலம் அரசு கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்க மசோதா வகை செய்கிறது.
 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.மேலும் தொடரும் செய்திகள்

Sponsored Ads

Nalam Pasumaiyagam

Black Forest Cakes


Thalir ProductsThoothukudi Business Directory