» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
புற்றுநோய் கொடுமையால் மனமுடைந்த பெண் தற்கொலை : தூத்துக்குடி அருகே சோகம்
சனி 13, ஜூன் 2026 10:48:52 AM (IST)
தூத்துக்குடி அருகே புதுக்கோட்டையில் புற்றுநோய் பாதிப்பால் மனமுடைந்த பெண், தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார்.
தூத்துக்குடி மாவட்டம் புதுக்கோட்டை பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்தவர் பாஸ்கர். இவருடைய மனைவி லட்சுமி (54). இவர்களுக்கு அஜித் என்ற மகனும், மோனிஷா என்ற மருமகளும் உள்ளனர். லட்சுமி தன் மகன் மற்றும் மருமகளுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். லட்சுமிக்குக் கடந்த சில காலமாக கர்ப்பப்பை புற்றுநோய் பாதிப்பு இருந்து வந்தது. இதற்காக அவர் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில், நோய் வலியின் காரணமாகக் கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகியிருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை 7 மணியளவில் லட்சுமியின் மருமகள் மோனிஷா எழுந்து பார்த்தபோது, லட்சுமியைக் காணவில்லை. வீட்டின் பல்வேறு இடங்களில் தேடியபோது, வீட்டின் பின்பக்கம் உள்ள ஓட்டுச் சாய்புக் கொட்டகையின் பனங்கட்டையில், லட்சுமி தனது சேலையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
இதுகுறித்துத் தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புதுக்கோட்டை காவல் நிலைய போலீசார், லட்சுமியின் உடலைக் கைப்பற்றிப் பிரேதப் பரிசோதனைக்காகத் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் கஞ்சா விற்ற அண்ணன், தம்பி கைது!
சனி 13, ஜூன் 2026 12:06:32 PM (IST)

பைக்குகள் நேருக்கு நேர் மோதி விபத்து: வாலிபர் பலி; பெண் உட்பட 3 பேர் படுகாயம்
சனி 13, ஜூன் 2026 11:00:30 AM (IST)

மாணவி கொலை வழக்கு: மரண தண்டனை பெற்ற குற்றவாளி மேல்முறையீடு செய்ய மீண்டும் அவகாசம்!
சனி 13, ஜூன் 2026 10:40:05 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு என்எல்சி நிறுவனம் ரூ.3.65 கோடி சிஎஸ்ஆர் நிதி: 11 திட்டங்களுக்கு ஒப்புதல்!
சனி 13, ஜூன் 2026 8:52:16 AM (IST)

குடியிருப்புப் பகுதி டாஸ்மாக் கடையை பெண்கள் முற்றுகையிட்டுப் போராட்டம்: தூத்துக்குடியில் பரபரப்பு
சனி 13, ஜூன் 2026 8:42:12 AM (IST)

கோவில் திருப்பணிக்கு மண் அள்ளிய டிராக்டர் பறிமுதல் : கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம்!
சனி 13, ஜூன் 2026 8:34:15 AM (IST)









