» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் ஜூன் மாத உண்டியல் வருமானம் ₹4.20 கோடி

சனி 13, ஜூன் 2026 8:12:13 AM (IST)

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூன் மாதத்திற்கான உண்டியல் வருமானமாக ₹4.20 கோடி ரொக்கம் மற்றும் தங்கம், வெள்ளிப் பொருட்கள் பக்தர்களால் காணிக்கையாகச் செலுத்தப்பட்டுள்ளதாகக் கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஜூன் மாதத்திற்கான உண்டியல் காணிக்கை எண்ணும் பணி, கோவில் நிர்வாக அலுவலக அரங்கில் வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமை ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது.

கோயில் தக்கார் ரா.அருள்முருகன் தலைமை வகித்து, உண்டியல் எண்ணும் பணியைப் பார்வையிட்டார். இணை ஆணையர் ஆ.அருணாசலம் முன்னிலை வகித்தார். இவர்களுடன் துணை ஆணையர்கள் ந.யக்ஞ நாராயணன், கு.கோமதி, உதவி ஆணையர் பி.எஸ்.லோகநாதன், அலுவலகக் கண்காணிப்பாளர் ஈ.சுப்பிரமணியன், ஆய்வர் செந்தில்நாயகி மற்றும் பொதுமக்கள் பிரதிநிதிகள் வேலாண்டி, மோகன், கருப்பன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். உண்டியல் எண்ணும் பணியில் அயற்பணி மற்றும் கோவில் பணியாளர்கள் முழுமையாக ஈடுபட்டனர்.

இரண்டு நாட்கள் நடைபெற்ற உண்டியல் எண்ணிக்கையின் முடிவில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை விவரங்கள்:

ரொக்கப் பணம்: ₹4,20,55,814 

தங்கம்: 1,768 கிராம்

வெள்ளி: 21,925 கிராம்

பித்தளை: 1,26,640 கிராம்

செம்பு: 15,200 கிராம்

தகரம்: 11,500 கிராம்

அந்நியச் செலவாணி: 1,431 வெளிநாட்டு நோட்டுகள் / நாணயங்கள்

பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனாக இவற்றை உண்டியலில் காணிக்கையாகச் செலுத்தியிருந்தது எண்ணிக்கை முடிவில் தெரியவந்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory