» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்து சிசிடிவி கேமராவை உடைத்த ரவுடி : டிஎஸ்பியிடம் புகார்!
வெள்ளி 12, ஜூன் 2026 9:53:50 PM (IST)
அம்மன்புரம் அருகே கிராம மக்களுக்குக் கொலை மிரட்டல் விடுத்ததுடன், கிராமத்தில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை உடைத்துத் தலைமறைவாக உள்ள ரவுடியை போலீசார் தீவிரமாகத் தேடி வருகின்றனர
அம்மன்புரம் அருகே உள்ள முத்துமாலைவிளையைச் சேர்ந்தவர் சுப்பிரமணியன் மகன் சங்கர் (30). இவர் அம்மன்புரத்தில் உள்ள டீ கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார். கடந்த 10-ஆம் தேதி இரவு சங்கர் வேலை முடித்துவிட்டுத் தனது இருசக்கர வாகனத்தில் வீட்டிற்குச் சென்று கொண்டிருந்தார்.
முத்துமாலைவிளை பிள்ளையார் கோவில் அருகே சென்றபோது, அதே பகுதியைச் சேர்ந்த கருப்பசாமி மகன் சுரேஷ் (47) என்பவர் போதை தலைக்கேறிய நிலையில் எதிரே வந்துள்ளார். அவர் திடாரென சங்கரை வழிமறித்து அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
அத்துடன் நிற்காமல், கிராம மக்களின் பாதுகாப்புக்காக ஊரில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவை அடித்து உடைத்த சுரேஷ், அங்குத் திரண்ட கிராம மக்களுக்கும் கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்துப் பாதிக்கப்பட்டவர்கள் அளித்த புகாரின் பேரில் குரும்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தலைமறைவாக உள்ள சுரேஷ் மீது பல்வேறு காவல் நிலையங்களில் கொலை, கொலை முயற்சி, கொள்ளை, திருட்டு உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே, முத்துமாலைவிளையைச் சேர்ந்த பொதுமக்கள் ஸ்ரீவைகுண்டம் டிஎஸ்பி நிரேஸைச் சந்தித்து புகார் மனு ஒன்றை அளித்தனர். அதில், "ரவுடி சுரேஷால் எங்கள் உயிருக்கு எப்போது வேண்டுமானாலும் ஆபத்து ஏற்படலாம்; எனவே அவர் மீண்டும் வெளியே வராதவாறு கடுமையான பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து சிறையில் அடைக்க வேண்டும்," என்று கோரிக்கை விடுத்தனர்.
மனுவைப் பெற்றுக்கொண்ட டிஎஸ்பி நிரேஷ், பொதுமக்களுக்கு இனி அவராலோ அல்லது வேறு நபர்களாலோ எந்தவொரு அச்சுறுத்தலும் வராத வகையில், ரவுடி சுரேஷ் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்தார். இச்சம்பவம் முத்துமாலைவிளை மற்றும் குரும்பூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

அதிக மாத்திரைகளை சாப்பிட்ட இளம்பெண் உயிரிழப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 11:27:22 AM (IST)

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)








