» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி நிறைவு: 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு!
வெள்ளி 12, ஜூன் 2026 9:43:21 PM (IST)

ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம் தலைமையில் நடைபெற்ற ஜமாபந்தி நிறைவடைந்தது. இந்த ஜமாபந்தியில் தகுதியான பயனாளிகளுக்குப் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
ஓட்டப்பிடாரம் தாலுகா அலுவலகத்தில் கடந்த ஜூன் 2-ஆம் தேதி தொடங்கிய ஜமாபந்தி இன்றுடன் நிறைவுற்றது. இக்கூட்டத்தில் பசுவந்தனை, பரிவல்லிகோட்டை, ஓட்டப்பிடாரம், எப்போதும்வென்றான், வேடநத்தம், மணியாச்சி ஆகிய குறுவட்டங்களைச் சேர்ந்த கிராம பொதுமக்கள் திரளாகக் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை அளித்தனர்.
சிப்காட் தனி மாவட்ட வருவாய் அலுவலர் சங்கரலிங்கம் தலைமை வகித்து பொதுமக்களிடம் இருந்து மனுக்களைப் பெற்றார். ஜமாபந்தி நடைபெற்ற நாட்களில் மொத்தம் 715 மனுக்கள் பெறப்பட்டு, அவற்றில் 152 மனுக்களுக்கு உடனடித் தீர்வு காணப்பட்டுள்ளது. ஜமாபந்தியின் நிறைவு நாளான இன்று ஓட்டப்பிடாரம், புதியம்புத்தூர், சில்லாநத்தம் ஆகிய கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்துகொண்டு 135 கோரிக்கை மனுக்களை வழங்கினர்.
தொடர்ந்து நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்வில் உழவர் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் 8 நபர்களுக்கு ரூ.1,65,000 மதிப்பில் இறப்பு நிவாரண ஆணை வழங்கப்பட்டது. 1 நபருக்குத் தற்காலிக நிவாரண ஆணையும், 2 நபர்களுக்கு வாரிசு சான்றிதழும், 11 நபர்களுக்குப் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு 'இ-பட்டா' ஆணைகளும் வழங்கப்பட்டன.
இந்நிகழ்ச்சியில் சிப்காட் தனி வட்டாட்சியர் சந்திரன், ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் அய்யனார், சமூகப் பாதுகாப்புத் திட்ட வட்டாட்சியர் இசக்கிராஜ், துணை வட்டாட்சியர்கள் மரியவியாகுல ஜெயா, மாரிமுத்து மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், அலுவலகப் பணியாளர்கள் உட்படப் பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

ஓட்டப்பிடாரம், ஒட்டநத்தம் பகுதிகளில் நாளை மின்தடை அறிவிப்பு!
வெள்ளி 17, ஜூலை 2026 10:36:34 AM (IST)

குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க அரசு நடவடிக்கை: கனிமொழி எம்.பி. வலியுறுத்தல்!
வெள்ளி 17, ஜூலை 2026 10:20:41 AM (IST)

தூத்துக்குடி மாநகராட்சி வளர்ச்சிக்கு பொதுமக்கள் கருத்து தெரிவிக்கலாம்: மேயர் ஜெகன் பெரியசாமி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:59:15 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் புனித சந்தியாகப்பர் ஆலயத் திருவிழா கொடியேற்றம்: ஜூலை 25-ல் சப்பர பவனி!
வெள்ளி 17, ஜூலை 2026 8:35:25 AM (IST)

புகைப்படத்தைக் காட்டி மிரட்டிய விவகாரம்: பெண்ணை கத்தியால் குத்தி விட்டு வடமாநில வாலிபர் தற்கொலை
வெள்ளி 17, ஜூலை 2026 8:32:39 AM (IST)

கத்தியைக் காட்டி மிரட்டி வியாபாரியிடம் நகை, செல்போன் பறிப்பு : 2பேருக்கு போலீஸ் வலைவீச்சு!
வெள்ளி 17, ஜூலை 2026 8:27:04 AM (IST)








