» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி அதிமுக நிர்வாகி தவெகவில் இணைந்தார்

வெள்ளி 12, ஜூன் 2026 12:51:40 PM (IST)



தூத்துக்குடி மாவட்ட அதிமுக முக்கிய நிர்வாகியும், முன்னாள் அமைச்சரின் தீவிர விசுவாசியுமான ஆர்.சுதாகர் அதிமுகவில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி. சண்முகநாதனின் தீவிர விசுவாசியான ஆர்.சுதாகர், தூத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் முன்னாள் தலைவராகவும், அதிமுக அமைப்புசாரா ஓட்டுநரணி மாவட்டத் தலைவராகவும் பொறுப்பு வகித்து வந்தார். 

இந்நிலையில், அவர் அதிமுகவில் இருந்து விலகியுள்ளார். அவர், தவெக பொதுச்செயலாளரும் ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை அமைச்சருமான புஸ்ஸி ஆனந்த் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்நிகழ்வின் போது முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு, பி.திருச்சிற்றம்பலம் ஆகியோர் உடனிருந்தனர்.

கடந்த சட்டமன்றத் தேர்தலின் போது தூத்துக்குடி தொகுதியில் அதிமுக வேட்பாளராக ஆர்.சுதாகர் தான் போட்டியிடுவார் என்று அவரது ஆதரவாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், கடைசி நேரத்தில் திடீரென முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் தூத்துக்குடி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதனால் அதிமுக தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்த சுதாகர், கட்சிப் பணிகளில் இருந்து சற்று ஒதுங்கியே இருந்தார். இந்த அதிருப்தியின் உச்சகட்டமாக தற்போது அவர் தவெகவில் இணைந்துள்ளார்.

தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் பலர் கட்சித் தலைமை மீது கடும் அதிருப்தியில் இருந்து வருவதாகக் கூறப்படுகிறது. இதனால் அவர்கள் அடுத்தடுத்து மாற்றுக் கட்சிகளில் இணையத் திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital






Thoothukudi Business Directory