» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினம்: ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி ஏற்பு
வெள்ளி 12, ஜூன் 2026 12:01:21 PM (IST)

தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இன்று உலகக் குழந்தை தொழிலாளர் முறை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன.
குழந்தை தொழிலாளர் முறையினை முற்றிலும் அகற்றுவதற்கான விழிப்புணர்வு உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில், அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் கலந்துகொண்டு குழந்தை தொழிலாளர் முறைக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றுக்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து, தொழிலாளர் துறையின் சார்பில் பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சிறப்புப் பொதுக் கையெழுத்து இயக்கம் தொடங்கப்பட்டது. இந்த இயக்கத்தினை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் தனது கையொப்பமிட்டு முறைப்படி தொடங்கி வைத்தார்.
மேலும், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் பொருட்டு தொழிலாளர் துறை சார்பில் விழிப்புணர்வுப் பிரச்சார வாகனம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த வாகனத்தில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சுவரொட்டிகள் மற்றும் ஒட்டுவில்களை மாவட்ட ஆட்சியர் விஷு மகாஜன் ஒட்டி, விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை முறைப்படுத்தினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி மாவட்ட பிஆர்ஓ-வாக கருப்பண்ண ராஜவேல் நியமனம்!
சனி 13, ஜூன் 2026 9:55:14 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்: ரூ.8.77 கோடி சமரசத் தொகை வழங்கல்!
சனி 13, ஜூன் 2026 9:33:23 PM (IST)

வெறும் கம்பமாக நிற்கும் செக்போஸ்ட் சிசிடிவி : ஆவணங்களின்றிப் பறக்கும் லாரிகள்!
சனி 13, ஜூன் 2026 9:21:41 PM (IST)

தூத்துக்குடியில் ஜூன் 16-ல் குடிநீர் விநியோகம் நிறுத்தம் : மாநகராட்சி ஆணையர் அறிவிப்பு
சனி 13, ஜூன் 2026 7:50:18 PM (IST)

நிகிலேசன்நகர் மெயின் ரோட்டில் மழைநீர் வடிகால் : மேயர் ஜெகன் பெரியசாமியிடம் பொதுமக்கள் மனு!
சனி 13, ஜூன் 2026 7:45:03 PM (IST)

சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு திட்டப் பணிகள் - ஆட்சியர் விஷு மகாஜன் ஆய்வு
சனி 13, ஜூன் 2026 7:35:59 PM (IST)









