» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

சாலை விபத்தில் காயமடைந்தவர் உயிரிழப்பு!

வெள்ளி 12, ஜூன் 2026 11:10:54 AM (IST)

சாத்தான்குளம் அருகே சாலை விபத்தில் படுகாயமடைந்து, நெல்லை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்தவர் சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு உயிரிழந்தார்.

தூத்துக்குடி மாவட்டம், கீழ நடுநாலுமூளைக்கிணறு வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் பாலமுருகன் (47). இவர் கடந்த 29.05.2026 அன்று சாத்தான்குளம் பண்ணம்பாறை - திருச்செந்தூர் சாலையில் சென்றுகொண்டிருந்தபோது நேரிட்ட விபத்தில் பலத்த காயமடைந்தார்.

அதைத்தொடர்ந்து, அவர் உடனடியாக மீட்கப்பட்டு மேல் சிகிச்சைக்காகத் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி நேற்று நள்ளிரவு பரிதாபமாக உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து சாத்தான்குளம் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory