» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் 65 சதவீதத்தைக் கடந்த வாக்குப்பதிவு - பொதுமக்கள் ஆர்வம்!

வியாழன் 23, ஏப்ரல் 2026 3:52:28 PM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மிகத் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. 3 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு 65%-ஐ கடந்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்தில் சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு மிகத் தீவிரமான கட்டத்தை எட்டியுள்ளது. காலை முதலே விறுவிறுப்பாக நடைபெற்று வரும் வாக்குப்பதிவில், மதியம் 3 மணி நிலவரப்படி மாவட்டத்தின் ஒட்டுமொத்த சராசரி வாக்குப்பதிவு 65.18% ஆக உயர்ந்துள்ளது.

தொகுதி வாரியான நிலவரம் (மதியம் 3 மணி):

மாவட்டத்தின் 6 தொகுதிகளிலும் வாக்குப்பதிவு சீராக உயர்ந்து வருகிறது. அதன் விவரம் பின்வருமாறு:

213 விளாத்திகுளம் 68.90%

214 தூத்துக்குடி 66.25%

218 கோவில்பட்டி 64.74%

216 ஸ்ரீவைகுண்டம் 64.44%

215 திருச்செந்தூர் 63.76%

217 ஒட்டப்பிடாரம் 63.43%

மதியம் 1 மணி நிலவரத்தைத் தொடர்ந்து, 3 மணி நிலவரத்திலும் 68.90% வாக்குகளுடன் விளாத்திகுளம் தொகுதி மாவட்டத்தில் முதலிடத்தில் நீடிக்கிறது. வெயிலின் தாக்கம் குறையத் தொடங்கியுள்ளதால், கிராமப்புற மற்றும் நகர்ப்புற வாக்குச்சாவடிகளில் வாக்காளர்களின் வருகை தற்போது மேலும் அதிகரித்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital




Thoothukudi Business Directory