» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு சிறப்பு வழிபாடு: பூஜை காலங்களில் மாற்றம்!

ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:07:35 AM (IST)

திருச்செந்தூர் கோவிலில் தமிழ் புத்தாண்டு மற்றும் சித்திரை திருநாளை முன்னிட்டு, நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) சிறப்புப் பூஜைகள் நடைபெறவுள்ளன. 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் தமிழ் புத்தாண்டு சித்திரை 1-ம் தேதியை முன்னிட்டு நாளை மறுநாள் (செவ்வாய்க்கிழமை) அதிகாலை 4 மணிக்கு நடைதிறக்கப்பட்டு, 4.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனையும், 6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகமும், தீபாராதனையும் நடக்கிறது.

பின்னர் காலை 8 மணிக்கு சுவாமி அஸ்திரதேவர் கடலில் புனித நீராடும் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. தொடர்ந்து காலை 10 மணிக்கு உச்சிகால அபிஷேகமும், சண்முகருக்கு அன்னாபிஷேகம், உச்சிகால தீபாராதனையும் நடக்கிறது.

தொடர்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெறுகிறது. தமிழ் புத்தாண்டை முன்னிட்டு, கோவில் கலையரங்கில் பொது விவரக்குறிப்பேடு வெளியிடுதல், பக்தி சொற்பொழிவு, பரத நாட்டியம் மற்றும் பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory