» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
சிறுமிக்கு பாலியல் தொல்லை: குழந்தைகள் உதவி மையத் தகவலால் சிக்கிய குற்றவாளி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:48:56 AM (IST)
கயத்தாறு அருகே சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்த புகாரில், டைல்ஸ் ஒட்டும் தொழிலாளி ஒருவரைப் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அடுத்த பணிக்கர்குளம் கீழத்தெருவைச் சேர்ந்தவர் ஜெயமுருகன் (56). டைல்ஸ் ஒட்டும் தொழிலாளியான இவர், அதே பகுதியைச் சேர்ந்த 11 வயது சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
இந்தக் கொடுமை குறித்துக் குழந்தைகள் உதவி மையத்திற்கு (Childline) ரகசியத் தகவல் கிடைத்தது. அதன்பேரில், அதிகாரிகள் சம்பந்தப்பட்ட சிறுமியிடமும், அந்தப் பகுதியிலும் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் சிறுமிக்கு நேர்ந்த பாலியல் சீண்டல்கள் உறுதி செய்யப்பட்டன.
இதையடுத்து, குழந்தைகள் பாதுகாப்புத் துறை அலுவலர் அளித்த புகாரின் அடிப்படையில், அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த ஜெயமுருகனைப் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

திமுக ஆட்சி மக்களுக்கான நம்பகத்தன்மை கொண்ட ஆட்சி: மார்க்கண்டேயன் எம்.எல்.ஏ. வாக்கு சேகரிப்பு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:33:51 PM (IST)

காட்டுப்பன்றிகளைக் கட்டுப்படுத்த துப்பாக்கி ஏந்திய வனக்காவலர்கள்: அதிமுக வேட்பாளர் அதிரடி வாக்குறுதி!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:28:15 PM (IST)

வாக்கு சேகரிக்க வந்த ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வுக்கு பொதுமக்கள் எதிர்ப்பு: ஸ்ரீவைகுண்டத்தில் பரபரப்பு
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 1:25:02 PM (IST)

தூத்துக்குடியில் குடிபோதையில் மினிபஸ் இயக்கிய ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை: 2 பஸ்கள் பறிமுதல்!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:28:03 AM (IST)

வடிவேலு பாணியில் எடப்பாடி பழனிசாமி காமெடி அரசியல் செய்கிறார்: கான்ஸ்டண்டன் ரவீந்திரன் எம்.பி.
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:21:14 AM (IST)

தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் பெண்ணிற்கு பாலியல் தொல்லை: போலீஸ் ஏட்டு மீது வழக்கு!
ஞாயிறு 12, ஏப்ரல் 2026 9:10:02 AM (IST)







