» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

இளைஞர் மீது தாக்குதல்: சகோதரர்கள் இருவர் கைது!

ஞாயிறு 12, ஏப்ரல் 2026 8:44:57 AM (IST)

கோவில்பட்டியில் இளைஞர் ஒருவரை வழிமறித்துக் கல்லால் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்த இரண்டு வாலிபர்களைப் போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொருவரைத் தேடி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காட்டுநாயக்கர் தெரு, அறிஞர் அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் ராம்பிரசாத் (20). இவர் கடந்த வியாழக்கிழமை இரவு தனது நண்பர்களான இசக்கி மற்றும் கருப்பசாமி ஆகியோருடன் அப்பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அதே பகுதியைச் சேர்ந்த சகோதரர்களான சுரேஷ்குமார், கண்ணதாசன் என்கிற கன்னரசு மற்றும் அவர்களது நண்பர் மதன்ராஜ் ஆகியோர் அங்கு நின்றிருந்தனர்.

முன்பே இருந்த முன்விரோதம் காரணமாக, ராம்பிரசாத்தை அந்த மூன்று பேரும் வழிமறித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றிய நிலையில், அவர்கள் ராம்பிரசாத்தைக் கையாலும், கல்லாலும் சரமாரியாகத் தாக்கினர். இதனை ராம்பிரசாத்தின் நண்பர்கள் தடுக்க முயன்றதால், தாக்குதலில் ஈடுபட்ட மூவரும் அங்கிருந்து தப்பியோடினர். பலத்த காயமடைந்த ராம்பிரசாத் சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்தச் சம்பவம் குறித்து ராம்பிரசாத் அளித்த புகாரின் அடிப்படையில், கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். தலைமறைவாக இருந்த சுரேஷ்குமார் (33) மற்றும் கண்ணதாசன் (25) ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கில் தொடர்புடைய மதன்ராஜ் என்பவரை போலீசார் தேடி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory