» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் பார்வையாளர்களைச் சந்திப்பதில் சிக்கல்: தூத்துக்குடியின் மையப்பகுதிக்கு மாற்ற கோரிக்கை!

சனி 4, ஏப்ரல் 2026 3:23:57 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள தேர்தல் பார்வையாளர்களைப் பொதுமக்கள் எளிதில் சந்திக்கும் வகையில், அவர்கள் தங்கியுள்ள இடத்தை நகரின் மையப்பகுதிக்கு மாற்ற வேண்டும் என 'எம்பவர் இந்தியா' அமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்திற்கான தேர்தல் பார்வையாளர்கள் முத்தையாபுரத்தில் உள்ள 'ஸ்பிக் சாகர் சதன்' விடுதியில் தங்கியுள்ளனர். பொதுமக்கள் மற்றும் தேர்தல் தொடர்பான புகார்களை அளிக்க விரும்புவோர் அங்கு வந்து தங்களைச் சந்திக்கலாம் என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

இது குறித்து எம்பவர் இந்தியா அமைப்பின் செயல் இயக்குநர் அ.சங்கர் தலைமைத் தேர்தல் அதிகாரிக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் "தேர்தல் பார்வையாளர்கள் தங்கியுள்ள முத்தையாபுரம் பகுதி தூத்துக்குடி நகரில் இருந்து சுமார் 10 கி.மீ தொலைவில் உள்ளது. இது மிகவும் ஒதுக்குப்புறமான பகுதி என்பதுடன், அங்கு செல்வதற்குப் போதிய பொதுப் போக்குவரத்து வசதிகளும் இல்லை. இதனால் சாமானிய மக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் தங்களின் புகார்களைத் தெரிவிக்கப் பார்வையாளர்களைச் சந்திப்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது.

ஜனநாயக முறைப்படி தேர்தல் சுமுகமாக நடைபெற வேண்டுமானால், பொதுமக்கள் தங்களின் புகார்களைத் தேர்தல் ஆணையத்திடம் எளிதாகக் கொண்டு செல்ல வழிவகை செய்ய வேண்டும். எனவே, தலைமைத் தேர்தல் அதிகாரி இதில் உடனடியாகத் தலையிட்டு, நகரின் மையப்பகுதியில் உள்ள அரசு சுற்றுலா மாளிகையில் பார்வையாளர்கள் பொதுமக்களைச் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலை உறுதி செய்ய இத்தகைய மாற்றங்கள் அவசியம் எனத் தேர்தல் விழிப்புணர்வு குழுவினர் சுட்டிக்காட்டியுள்ளனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory