» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
பெட்டிக்கடையில் 14 கிலோ புகையிலை பொருட்கள் பறிமுதல்: உரிமையாளர் கைது!
ஞாயிறு 29, மார்ச் 2026 7:40:13 PM (IST)
தூத்துக்குடி பஜார் பகுதியில், சட்டவிரோதப் புகையிலை விற்பனையில் ஈடுபட்டிருந்த நபரை போலீசார் கைது செய்து, சுமார் 14 கிலோ எடையுள்ள புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.
தூத்துக்குடி வடபாகம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி நிவேதா தலைமையிலான போலீசார் நேற்று பஜார் பகுதியில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த ஒரு பெட்டிக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகத் தெரியவந்தது.
அந்தக் கடையில் நடத்தப்பட்ட சோதனையில், விற்பனைக்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் 14 கிலோ 851 கிராம் எடையுள்ள புகையிலை பொருட்கள் பிடிபட்டன. இதன் சந்தை மதிப்பு சுமார் 19,000 ரூபாய் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, கடையின் உரிமையாளரான தூத்துக்குடியைச் சேர்ந்த விஜயகுமார் (31) என்பவரை போலீசார் அதிரடியாகக் கைது செய்தனர். மேலும், அவர் வைத்திருந்த புகையிலை பொருட்களைப் பறிமுதல் செய்த வடபாகம் போலீசார், அவர் மீது வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாளை முடிகிறது வேட்புமனுத் தாக்கல்: இதுவரை 94 மனுக்கள் தாக்கல் - ஆட்சியர் விஷு மகாஜன் தகவல்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:44:17 AM (IST)

கேஸ் சிலிண்டர் வெடித்து வீடு தரைமட்டம்: 7 பவுன் நகை, ரூ.2 லட்சம் பணம் தீயில் கருகின!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 9:33:16 AM (IST)

திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் மீன் வரத்து குறைவு: போட்டி போட்டு வாங்கிய பொதுமக்கள்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:48:37 AM (IST)

மெரினாவில் இடம் கொடுத்தது அதிமுக அரசுதான் : கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ விளக்கம்!
ஞாயிறு 5, ஏப்ரல் 2026 8:42:16 AM (IST)

கடற்கரையில் கஞ்சா விற்பனை: 4 பேர் கைது – 1 கிலோ கஞ்சா பறிமுதல்!
சனி 4, ஏப்ரல் 2026 8:06:41 PM (IST)

கோவில்பட்டியில் கடம்பூர் ராஜூ வேட்பு மனு தாக்கல்
சனி 4, ஏப்ரல் 2026 7:06:36 PM (IST)







