» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள், நீர் தின விழா

சனி 21, மார்ச் 2026 5:25:17 PM (IST)



சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் உலக காடுகள் மற்றும் நீர் தின விழா நடைபெற்றது. 

தூத்துக்குடி மாவட்டம், சாகுபுரம் டி.சி.டபிள்யூ நிறுவனத்தில் ஆண்டுதோறும் மார்ச் 21-ம் தேதி உலக காடுகள் தினமும், மார்ச் 22-ம் தேதி உலக நீர் தினமும் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டும் உயர்மட்ட அதிகாரிகள் பங்கேற்ற சிறப்பு கருத்தரங்கம் நடைபெற்றது.

இந்தக் கருத்தரங்கில், தற்போது பெருகி வரும் தண்ணீர் தேவை மற்றும் உலக அளவில் மாறிவரும் புவி வெப்பமயமாதல் குறித்த முக்கியக் கருத்துகள் விரிவாக விவாதிக்கப்பட்டன. இந்நிகழ்ச்சிக்கு மூத்த செயல் உதவித் தலைவர் (பணியகம்) ஸ்ரீனிவாசன் மற்றும் உதவித் தலைவர் (உற்பத்தி) சுரேஷ் ஆகியோர் தலைமை தாங்கிச் சிறப்பித்தனர்.

பசுமைப் பணிகள்விழாவின் ஒரு பகுதியாக, தொழிற்சாலையின் SIOPP வளாகத்தில் 50-க்கும் மேற்பட்ட மரக்கன்றுகள் நடப்பட்டன. இந்நிகழ்வில் ISO தரச்சான்றிதழ் தணிக்கையாளர்கள் கேப்டன் பாலசுப்பிரமணியன், ராஜகோபால், நாகராஜன் மற்றும் ஆலையின் மூத்த அதிகாரிகள் கலந்து கொண்டனர். ஆலையில் பராமரிக்கப்பட்டு வரும் பசுமைச் சூழலை அவர்கள் வெகுவாகப் பாராட்டினர்.

இவ்விழாவில் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் சிறப்புகளை விளக்கும் "DCW & Biodiversity” என்ற புத்தகம் காட்சிப்படுத்தப்பட்டது. இதனைப் பார்வையிட்ட அதிகாரிகள் நிறுவனத்தின் சுற்றுச்சூழல் பாதுகாப்பு முயற்சிகளைப் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.நிகழ்ச்சியின் இறுதியில் சுற்றுச்சூழல் துறை பொது மேலாளர் ரவிக்குமார் நன்றி கூறினார். இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை மக்கள் தொடர்புத் துறை, சிவில் மற்றும் சுற்றுச்சூழல் துறையினர் இணைந்து செய்திருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory