» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.20.43 லட்சம் ரொக்கம் பறிமுதல் - ஆட்சியர் தகவல்!

சனி 21, மார்ச் 2026 11:10:51 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.20,43,380 பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஆட்சியர் தெரிவித்துள்ளார். 

இந்தியத் தேர்தல் ஆணையத்தால் தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026, வரும் 23.04.2026 அன்று நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் அறிவிப்பு வெளியிடப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் (Model Code of Conduct) உடனடியாக அமலுக்கு வந்துள்ளன.

இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்திற்குட்பட்ட 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் விதிமீறல்களைக் கண்காணிக்க 24 மணி நேரமும் பறக்கும் படைகள் (Flying Squads) மற்றும் நிலையான கண்காணிப்புக் குழுக்கள் (Static Surveillance Teams) தீவிரமாகச் செயல்பட்டு வருகின்றன. இக்குழுக்கள் உரிய ஆவணங்களின்றி எடுத்துச் செல்லப்படும் பணம் மற்றும் பொருட்களைக் கைப்பற்றும் பணியில் ஈடுபட்டுள்ளன.

பறிமுதல் செய்யப்பட்ட விவரங்கள் : நேற்று (மார்ச் 20) வரை மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட சோதனைகளில் கைப்பற்றப்பட்ட ரொக்கம் மற்றும் பொருட்களின் விவரங்களைப் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்:

உரிய ஆவணங்களின்றிப் பறிமுதல் செய்யப்பட்ட மொத்த ரொக்கம்: ரூ. 20,43,380/-

கைப்பற்றப்பட்ட இலவசப் பொருட்களின் மதிப்பு: ரூ. 20,280/-

பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு: ரூ. 15,647/-

உரிய ஆவணங்களைச் சமர்ப்பித்து விடுவிக்கப்பட்ட ரொக்கம்: ரூ. 6,54,600/-

தேர்தல் நடத்தை விதிகளைப் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் முழுமையாகப் பின்பற்றி, தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைப்பு நல்குமாறு மாவட்ட நிர்வாகம் சார்பில் கேட்டுக்கொள்ளப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital



Thoothukudi Business Directory