» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தமிழக சட்டமன்ற தேர்தல்: தூத்துக்குடி தவெக உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் வெளியீடு?

சனி 21, மார்ச் 2026 10:49:41 AM (IST)



தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான தமிழக வெற்றிக் கழகத்தின் உத்தேச வேட்பாளர்கள் பட்டியல் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி சட்டமன்றத் தொகுதியில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் அக்கட்சியின் தலைவர் விஜய்யின் நெருங்கிய நண்பரும், நகைச்சுவை நடிகருமான ஸ்ரீநாத் போட்டியிட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது. முன்னதாக, இத்தொகுதியில் அஜிதா ஆக்னல் மற்றும் எஸ்டிஆர் சாமுவேல் ராஜா ஆகியோரின் பெயர்கள் பரிசீலனையில் இருந்த நிலையில், தற்போது ஸ்ரீநாத் போட்டியிடுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்துள்ளன.

இதுபோல் திருச்செந்தூரில் ஜேகேஆர் முருகன் முருகன், ஸ்ரீவைகுண்டத்தில் அன்னை சரவணன், ஓட்டப்பிடாரத்தில் மதன்ராஜ், விளாத்திகுளத்தில் மகேஷ்வர் ஆகியோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட வாய்ப்புள்ளதாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இது அதிகாரப்பூர்வமான பட்டியல் அல்ல என்பதும், கட்சித் தலைமை விரைவில் இது குறித்த முறையான அறிவிப்பை வெளியிடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory