» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கேட்பாரற்று நின்ற வேனில் 1,150 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்: கோவில்பட்டி அருகே பரபரப்பு!

சனி 21, மார்ச் 2026 8:56:00 AM (IST)

கோவில்பட்டி அருகே சாலையோரம் கேட்பாரற்று நின்ற லோடு வேன் ஒன்றிலிருந்து, கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 1,150 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளைப் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ஆம் தேதி நடைபெற உள்ளதை முன்னிட்டு, மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளன. தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்காளர்களுக்குப் பணம் மற்றும் பரிசுப் பொருட்கள் விநியோகிப்பதைத் தடுக்கப் பறக்கும் படையினரும், போலீசாரும் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

நேற்று கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் நாலாட்டின்புதூர் காவல் ஆய்வாளர் காளிமுத்து தலைமையிலான போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது விஜயாபுரி கிராமத்தின் நடுத்தெருப் பகுதியில் சாலையோரம் ஒரு லோடு வேன் நீண்ட நேரமாகக் கேட்பாரற்று நின்றதைக் கண்டு போலீசார் சந்தேகமடைந்தனர்.

அந்த வாகனத்தை நெருங்கிச் சோதனை செய்தபோது, அதில் 23 மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. மூட்டைகளைத் திறந்து பார்த்தபோது, அவற்றில் மொத்தம் 1,150 கிலோ ரேஷன் அரிசி கடத்துவதற்காகப் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டு பிடிக்கப்பட்டது.

உடனடியாக அந்த அரிசி மூட்டைகளைப் பறிமுதல் செய்த போலீசார், மேலதிக விசாரணைக்காகத் தூத்துக்குடி உணவுப்பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

இந்த ரேஷன் அரிசி எங்கிருந்து கடத்தி வரப்பட்டது? கேரளா போன்ற அண்டை மாநிலங்களுக்குக் கடத்தத் திட்டமிடப்பட்டதா? போலீசார் வருவதைக் கண்டு ஓட்டுநர் வாகனத்தை நிறுத்திவிட்டுத் தப்பி ஓடிவிட்டாரா? என்பது குறித்துப் பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital






Thoothukudi Business Directory