» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி பள்ளிவாசலில் ரமலான் சிறப்புத் தொழுகை : திரளான இஸ்லாமியர்கள் பங்கேற்பு
சனி 21, மார்ச் 2026 8:39:11 AM (IST)

தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசலில் ரமலான் பண்டிகையையொட்டி நேற்று சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியப் பெருமக்கள் கலந்துகொண்டு ஒருவருக்கொருவர் வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டனர்.
புனித ரமலான் மாதத்தில் முப்பது நாட்கள் நோன்பு நோற்ற இஸ்லாமியர்கள், அதன் நிறைவாக ஈகைத் திருநாளைக் கொண்டாடி வருகின்றனர். தமிழக அரசு தலைமை காஜி வரும் சனிக்கிழமை (மார்ச் 21) ரமலான் பண்டிகை கொண்டாடப்படும் என அறிவித்திருந்த நிலையில், ஒரு பிரிவினர் நேற்றே பண்டிகையைக் கொண்டாடினர்.
அதன்படி, தூத்துக்குடி லூர்தம்மாள்புரம் மஸ்ஜித் ரஹ்மான் பள்ளிவாசலில் நோன்புப் பெருநாள் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இந்த விழாவிற்கு இமாம் அக்தர் தலைமை தாங்கித் தொழுகை நடத்தினார். அதனைத் தொடர்ந்து முகமது இஸ்மாயில் பெருநாள் சொற்பொழிவு ஆற்றினார்.
இந்தச் சிறப்புத் தொழுகையில் பெண்கள் உட்படத் திரளான இஸ்லாமிய மக்கள் கலந்துகொண்டு வழிபாடு நடத்தினர். தொழுகை முடிந்ததும் ஒருவருக்கொருவர் ஆரத்தழுவித் தங்களது ரமலான் வாழ்த்துகளை மகிழ்ச்சியுடன் பகிர்ந்து கொண்டனர். இந்நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் அகமது இக்பால், நிர்வாகிகள் சுலைமான், முகமது, நவாஸ் அண்ணல் மற்றும் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








