» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடி மாவட்ட தேர்தல் பார்வையாளர்கள் நியமனம் : கண்காணிப்புப் பணி தீவிரம்!
வியாழன் 19, மார்ச் 2026 4:12:25 PM (IST)

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் 2026- ஐ முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டப் பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தமிழ்நாடு சட்டமன்றப் பொதுத்தேர்தல் - 2026, வருகின்ற ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெறுமென இந்தியத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் தேர்தல் பணிகளைக் கண்காணிப்பதற்காக இந்தியத் தேர்தல் ஆணையத்தால் நியமிக்கப்பட்ட பொதுப் பார்வையாளர்கள், செலவினப் பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் ஆகியோர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளனர்.
பார்வையாளர்கள் மற்றும் ஒதுக்கப்பட்ட தொகுதிகள்:
1. தேர்தல் பொதுப் பார்வையாளர்: அர்விந்த் குமார் வேர்மா: 217-ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் 218-கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகள்.
2. தேர்தல் செலவினப் பார்வையாளர்கள்:
அனுப் குமார் ஜெயின்: 217-ஓட்டப்பிடாரம் (தனி) மற்றும் 218-கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதிகள்.
ஷிவ் பிரசாத் பால்: 213-விளாத்திகுளம் சட்டமன்றத் தொகுதி.
நக்குல் அகர்வால்: 214-தூத்துக்குடி மற்றும் 215-திருச்செந்தூர் சட்டமன்றத் தொகுதிகள்.
சன்னி கச்சன்வாஹா: 216-ஸ்ரீவைகுண்டம் சட்டமன்றத் தொகுதி.
3. காவல் பார்வையாளர்:ஹிர்மத் சுதிர் கல்யா: தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் (விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி) பொதுவான காவல் பார்வையாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள இந்தப் பார்வையாளர்கள், தேர்தல் நடத்தை விதிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகிறதா என்பதையும், பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் வேட்பாளர்களின் தேர்தல் செலவினங்களையும் தீவிரமாகக் கண்காணிப்பார்கள்.
பொதுமக்கள் மற்றும் வேட்பாளர்கள் தேர்தல் தொடர்பான புகார்கள் ஏதேனும் இருப்பின், அந்தந்தத் தொகுதிக்குரிய பார்வையாளர்களைத் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்டத் தேர்தல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








