» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் 2 கிலோ கஞ்சா பறிமுதல்: இளைஞர் கைது
வியாழன் 19, மார்ச் 2026 11:42:00 AM (IST)
தூத்துக்குடியில் போலீசார் நடத்திய வாகனச் சோதனையில், 2 கிலோ கஞ்சா கடத்தி வந்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்த ரூ.2லட்சம் மதிப்புள்ள கஞ்சாவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது...
தூத்துக்குடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு காவல் ஆய்வாளர் ஜானகி தலைமையிலான போலீசார், நேற்று இரவு நகரின் பல்வேறு பகுதிகளில் தீவிர ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தூத்துக்குடி மட்டக்கடை பஜார் பகுதியில் இருசக்கர வாகனங்களை நிறுத்திச் சோதனையிட்டுக் கொண்டிருந்தனர்.
அவ்வழியே அதிவேகமாக வந்த ஒரு இருசக்கர வாகனத்தை நிறுத்தி போலீசார் சோதனை செய்தபோது, அந்த வாகனத்தில் இருந்த பையில் 2 கிலோ கஞ்சா மறைத்து வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அந்த நபரைப் பிடித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், பிடிபட்ட நபர் தூத்துக்குடி கணேசபுரம் ஜார்ஜ் ரோடு பகுதியைச் சேர்ந்த அந்தோணி ராஜ் என்பவரின் மகன் காட்சன் (30) என்பது தெரியவந்தது. மேலும், இவர் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியில் அடையாளம் தெரியாத நபரிடம் இருந்து இந்தக் கஞ்சாவை வாங்கி வந்ததாகத் தெரிவித்துள்ளார்.
பறிமுதல் செய்யப்பட்ட 2 கிலோ கஞ்சாவின் மதிப்பு சுமார் 2 லட்சம் ரூபாய் இருக்கும் எனக் கூறப்படுகிறது. இது தொடர்பாக வழக்குப் பதிவு செய்த போலீசார், காட்சனைக் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இவருக்குக் கஞ்சா விநியோகம் செய்த மர்ம நபர்களைப் பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








