» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
அதிமுகவில் இணைந்த மாற்று அணி நிர்வாகிகள்!
வியாழன் 19, மார்ச் 2026 10:43:12 AM (IST)

தூத்துக்குடியில் மாற்று அணியைச் சேர்ந்த முக்கிய நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் முன்னிலையில் தங்களை அதிமுகவில் இணைத்துக் கொண்டனர்.
தூத்துக்குடி டூவிபுரத்தில் உள்ள மாநில அதிமுக வர்த்தக அணி அலுவலகத்தில் இந்த இணைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி கே. பழனிசாமி அவர்களின் தலைமையையும் கொள்கைகளையும் ஏற்று, ஓ.பி.எஸ் அணியைச் சேர்ந்த நிர்வாகிகள் அதிமுகவில் இணைந்தனர்.
முன்னாள் அமைச்சரும், அதிமுக மாநில வர்த்தக அணிச் செயலாளருமான சி.த. செல்லப்பாண்டியன் அவர்களுக்குச் சால்வை அணிவித்து முறைப்படி தங்களைக் கட்சியில் இணைத்துக் கொண்டவர்களில் மாவட்ட எம்.ஜி.ஆர் மன்றத் துணைச் செயலாளர் கமலக்கண்ணன், மாவட்ட இணைச் செயலாளர் உமா கண்ணன், மாவட்டத் தொழிற்சங்கச் செயலாளர் முத்துப்பட்டன் மற்றும் மாவட்ட இளைஞரணிச் செயலாளர் சுதாகர் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
புதிதாக இணைந்தவர்களை வரவேற்றுப் பேசிய சி.த. செல்லப்பாண்டியன், நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணி மகத்தான வெற்றி பெற வேண்டும் என்றும், அதற்காக அனைவரும் எவ்வித பாகுபாடுமின்றி ஒற்றுமையுடன் இணைந்து தீவிரமாகப் பணியாற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.
இந்நிகழ்வின் போது தெற்கு மாவட்ட அதிமுக துணைச் செயலாளர் சந்தனம், வடக்கு மாவட்ட ஜெ பேரவை இணைச் செயலாளர் ஜீவா பாண்டியன், முன்னாள் மத்திய கூட்டுறவு வங்கித் தலைவர் ராஜகோபால், முன்னாள் மேலூர் கூட்டுறவு வங்கித் தலைவர் சிவசுப்பிரமணியன், தெற்கு மாவட்ட வர்த்தக அணிச் செயலாளர் துரைசிங், முன்னாள் கவுன்சிலர் அகஸ்டின் மற்றும் கே.டி.சி. சங்கர், ஐயப்பன் உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








