» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர் விபத்தில் உயிரிழந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீடு
வியாழன் 19, மார்ச் 2026 8:45:43 AM (IST)

கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவில் தைப்பூசத் தேரோட்டத்தின் போது உயிரிழந்த தொழிலாளி சப்பாணிமுத்துவின் குடும்பத்திற்கு, கோவில் நிர்வாகம் சார்பில் ரூ.3 லட்சம் இழப்பீடு வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை கழுகாசல மூர்த்தி திருக்கோவில் தைப்பூசத் தேரோட்டத்தின் போது, தேருக்குக் கட்டை போடும் பணியில் சப்பாணிமுத்து என்ற தொழிலாளி ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாகத் தேர்ச் சக்கரத்தில் சிக்கி அவர் உயிரிழந்தார்.
உயிரிழந்த தொழிலாளியின் குடும்பம் மிகவும் ஏழ்மையான நிலையில் இருந்ததால், அவர்களுக்குக் கோவில் நிர்வாகம் உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (சிபிஎம்) கயத்தாறு ஒன்றியக் குழு சார்பில் தொடர் கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இது தொடர்பாகக் கட்சியினர் பல்வேறு போராட்டங்களையும் முன்னெடுத்தனர்.
இந்தத் தொடர் போராட்டத்தின் விளைவாக, கோவில் நிர்வாகம் தற்போது சப்பாணிமுத்துவின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் இழப்பீட்டுத் தொகையை வழங்கியுள்ளது. இது குறித்து கட்சியின் கயத்தாறு ஒன்றியக் குழு செயலாளர் எம். சாலமன் ராஜ் விடுத்துள்ள அறிக்கையில், "எங்களது கோரிக்கையை ஏற்று தொழிலாளியின் குடும்பத்திற்கு நிதி உதவி வழங்கிய கோவில் நிர்வாகத்திற்கு, கயத்தாறு ஒன்றியக் குழு சார்பில் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்," எனக் குறிப்பிட்டுள்ளார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








