» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

வேட்புமனுத் தாக்கல் படிவங்கள் தொகுதி வாரியாக அனுப்பி வைப்பு!

வியாழன் 19, மார்ச் 2026 8:40:55 AM (IST)



தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் மற்றும் தேர்தல் தொடர்பான படிவங்கள் அந்தந்தத் தொகுதி அலுவலர்களுக்கு நேற்று பிரித்து அனுப்பி வைக்கப்பட்டன.

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் மாதம் 23-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனுத் தாக்கல் வரும் 30-ஆம் தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு, தேர்தல் ஆணையம் பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளைத் தீவிரப்படுத்தி உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளிலும் வேட்புமனுத் தாக்கல் செய்வதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் உள்ளன.

வேட்புமனுத் தாக்கலுக்கான படிவம்-1 முதல் 7-ஏ வரையிலான படிவங்கள், தபால் வாக்கு படிவம், படிவம்-26 (வேட்பாளர் உறுதிமொழிப் பத்திரம்), தேர்தல் நாளன்று வாக்குச்சாவடிகளில் பயன்படுத்தப்படும் படிவங்கள் மற்றும் வாக்கு எண்ணிக்கை முடிந்த பின் வழங்கப்படும் தேர்தல் சான்றிதழ் உள்ளிட்ட அனைத்து ஆவணங்களும் சென்னை அரசு அச்சகத்தில் அச்சிடப்பட்டன.

சுமார் ஒரு லட்சத்திற்கும் அதிகமான இந்தப் படிவங்கள், தனி அலுவலர்கள் மூலம் நேற்று மாலை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்திற்குக் கொண்டு வரப்பட்டன. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள விளாத்திகுளம், தூத்துக்குடி, திருச்செந்தூர், ஸ்ரீவைகுண்டம், ஓட்டப்பிடாரம், கோவில்பட்டி ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் இந்தப் படிவங்களைத் தனித்தனியாகப் பிரித்து அனுப்பும் பணி நேற்று மாலை நடைபெற்றது. 

மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) ஷீலா, அந்தந்தத் தொகுதிப் பொறுப்பு அலுவலர்களிடம் படிவங்களை ஒப்படைத்தார். இந்நிகழ்வின் போது, தேர்தல் பிரிவு வட்டாட்சியர் தில்லைபாண்டி உள்ளிட்ட அரசு அதிகாரிகள் உடனிருந்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory