» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
முதியோர், மாற்றுத்திறனாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு: ஆட்சியர் இளம்பகவத் அறிவிப்பு
புதன் 18, மார்ச் 2026 8:41:29 AM (IST)
தூத்துக்குடி மாவட்டத்தில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு, 85 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் 40 சதவீதத்திற்கு மேல் பாதிப்புள்ள மாற்றுத்திறனாளிகள் தபால் வாக்கு செலுத்துவதற்கான சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலரும், ஆட்சியருமான இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
வீட்டிலிருந்தே வாக்களிக்க விரும்பும் தகுதியுள்ள நபர்களுக்கு, வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் (BLO) மூலம் அவர்களின் வீடுகளுக்கே சென்று படிவம் 12D வழங்கப்படும்.விண்ணப்பிக்கும் முறை: தேர்தல் அறிவிப்பு வெளியான 5 நாட்களுக்குள் இந்த விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து வழங்க வேண்டும். இந்த படிவத்தை மாவட்ட இணையதளமான www.thoothukudi.nic.in என்ற தளத்திலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
வீடு தேடி வரும் சேவை: தபால் வாக்கு அளிக்க விண்ணப்பித்தவர்களின் வீடுகளுக்கே தேர்தல் அலுவலர்கள் நேரடியாகச் சென்று, வாக்குப்பதிவு நாளுக்கு முன்னதாகவே வாக்குகளைப் பெற்றுக்கொள்வர்.
அத்தியாவசியப் பணியாளர்கள்: ராணுவம், காவல்துறை மற்றும் இதர அத்தியாவசியத் துறைகளில் பணியாற்றுவோருக்கு மட்டும் குறிப்பிட்ட மையங்களில் மூன்று நாட்கள் தபால் வாக்கு செலுத்த வசதி செய்யப்படும்.
100 சதவீத வாக்குப்பதிவு: வாக்குச்சாவடிக்கு வர இயலாத மூத்த குடிமக்களும், மாற்றுத்திறனாளிகளும் இந்த வாய்ப்பைப் பயன்படுத்தி தங்களது ஜனநாயகக் கடமையை 100 சதவீதம் நிறைவேற்ற வேண்டும் என்று ஆட்சியர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்த தகவல்கள் சம்பந்தப்பட்ட வாக்காளர்களுக்கு குறுஞ்செய்தி (SMS) மூலமாகவும் தெரிவிக்கப்படும்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








