» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டியில் இடி, மின்னலுடன் பலத்த மழை : பொதுமக்கள் மகிழ்ச்சி !
புதன் 18, மார்ச் 2026 8:15:42 AM (IST)
கோவில்பட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் இடி, மின்னலுடன் பெய்த பலத்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கோவில்பட்டியில் கடந்த சில வாரங்களாகக் கோடை வெயிலின் தாக்கம் மிக அதிகமாகக் காணப்பட்டது. அனல் காற்று மற்றும் கடும் வெப்பம் காரணமாகப் பகல் நேரங்களில் பொதுமக்கள் நடமாட்டம் குறைந்து காணப்பட்டது. இரவு நேரங்களிலும் புழுக்கம் நீடித்ததால் பொதுமக்கள் தூக்கமின்றித் தவித்து வந்தனர்.
இந்நிலையில், நேற்று காலை முதல் வெயில் கொளுத்திய நிலையில், மாலை 5 மணியளவில் திடீரென வானில் கருமேகங்கள் சூழ்ந்தன. மாலை 6 மணியளவில் இடி, மின்னலுடன் மழை பெய்யத் தொடங்கியது. இரவு 7:30 மணி வரை நீடித்த இந்த மழையினால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கியதால் வாகன ஓட்டிகள் முகப்பு விளக்குகளை ஒளிரவிட்டபடி சென்றனர். இந்த மழையினால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியதால் பொதுமக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கழுகுமலையில் கனமழை: மின்கம்பம் சாய்ந்து விபத்து
இதேபோல் கழுகுமலை பகுதியிலும் நேற்று மாலை ஒரு மணி நேரத்திற்கும் மேலாகப் பலத்த மழை பெய்தது. தெருக்களில் தண்ணீர் ஆறாகப் பெருக்கெடுத்து ஓடியது. ஒரு மாதத்திற்கும் மேலாக வாட்டி வதைத்த வெயிலுக்குப் பின் பெய்த இந்த மழையால் அப்பகுதி மக்கள் நிம்மதி அடைந்தனர்.
கழுகுமலை அண்ணா புதுத் தெரு பகுதியில் பெய்த கனமழையின் போது, அங்கிருந்த பழமையான மின்கம்பம் ஒன்று திடீரெனச் சாய்ந்தது. இதில், வீட்டின் அருகே நிறுத்தப்பட்டிருந்த ஓட்டுநர் சங்கிலிபாண்டி (41) என்பவருடைய மோட்டார் சைக்கிள் மின்கம்பம் விழுந்ததில் நசுங்கிப் பலத்த சேதமடைந்தது. அதிர்ஷ்டவசமாக உயிர்ச்சேதம் ஏதும் ஏற்படவில்லை.
தகவலறிந்து வந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக மின் இணைப்பைத் துண்டித்து, சாய்ந்த மின்கம்பத்தை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








