» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன் ரீல்ஸ் எடுத்த இளம்பெண்கள் மீது புகார் - போலீசார் விசாரணை
புதன் 18, மார்ச் 2026 7:58:59 AM (IST)
கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு நடனமாடி, சமூக வலைதளங்களில் பதிவிட்ட இளம்பெண்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி கோயில் நிர்வாகம் சார்பில் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி வடக்கு மாவட்டத் தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என்.பி. ராஜகோபால் மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பிய மனுவில் கூறியிருந்ததாவது: "கோவில்பட்டி செண்பகவல்லி அம்மன் கோயில் முன்பு இரண்டு இளம்பெண்கள் குத்துப்பாட்டுக்கு நடனமாடி 'ரீல்ஸ்' எடுத்து, அதனை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
கோயிலின் புனிதத்தன்மையைக் கெடுக்கும் வகையில் செயல்பட்ட அந்தப் பெண்கள் மீது வழக்குப் பதிவு செய்து கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி, வரும் 23-ஆம் தேதி தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில் கோவில்பட்டி சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகைப் போராட்டம் நடைபெறும்."
இந்த விவகாரம் சர்ச்சையானதைத் தொடர்ந்து, கோயில் செயல் அலுவலர் (கூடுதல் பொறுப்பு) வள்ளிநாயகம், கோவில்பட்டி கிழக்கு காவல் நிலையத்தில் இதுகுறித்து முறைப்படி புகார் அளித்தார். அந்தப் புகாரின் அடிப்படையில் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில்: "சம்பந்தப்பட்ட இளம்பெண்களைக் காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினோம். அவர்கள் தங்களின் செயலுக்குப் பகிரங்கமாக வருத்தம் தெரிவித்தனர். மேலும், இன்ஸ்டாகிராம் பக்கத்திலிருந்த அந்த வீடியோ பதிவுகளை உடனடியாக நீக்கியதுடன், இனிமேல் இதுபோன்ற செயல்களில் ஈடுபடமாட்டோம் என்றும் உறுதி அளித்துள்ளனர்," எனத் தெரிவித்தனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் ஆட்டோ மீது லாரி மோதி விபத்து: பெண் பலி; சிறுமிகள் உட்பட 10 பேர் படுகாயம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 10:58:10 AM (IST)

மாணவி படுகொலை: கனிமொழி எம்.பி., அமைச்சர் கீதா ஜீவன் நேரில் ஆறுதல்
ஞாயிறு 22, மார்ச் 2026 10:24:56 AM (IST)

தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின கபடி போட்டி: துறைமுக ஆணையத் தலைவர் பரிசு வழங்கினார்
ஞாயிறு 22, மார்ச் 2026 9:43:42 AM (IST)

ஜாமீனில் வந்த வாலிபர் தூக்கிட்டுத் தற்கொலை - போலீசார் விசாரணை!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:40:00 AM (IST)

தூத்துக்குடியில் மீன் வரத்து அதிகரிப்பு: விற்பனை அமோகம்; பொதுமக்கள் ஆர்வம்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:36:44 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ.33.73 லட்சம் ரொக்கம் பறிமுதல்: ஆட்சியர் இளம்பகவத் தகவல்!
ஞாயிறு 22, மார்ச் 2026 9:02:37 AM (IST)








