» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தேர்தல் தொடர்பான அனைத்து ஊடகச் செய்திகளும் கண்காணிக்கப்படும்: ஆட்சியர் அறிவுறுத்தல்!

செவ்வாய் 17, மார்ச் 2026 8:06:19 AM (IST)

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, தேர்தல் தொடர்பான அனைத்து ஊடகச் செய்திகளும் தீவிரமாகக் கண்காணிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்டத் தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான க. இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாள் முதல் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன. தேர்தல் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பதில் ஊடகங்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. அதே சமயம், தேர்தல் காலத்தில் ஊடகங்களின் செயல்பாடுகளைக் கண்காணிக்க 'மாவட்ட ஊடகச் சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக் குழு' அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் மூலம் ஊடக விதிமீறல்கள் மற்றும் போலிச் செய்திகள் தீவிரமாகக் கண்காணிக்கப்படுகின்றன.

அரசியல் கட்சிகள் மற்றும் வேட்பாளர்கள் விளம்பரங்களை வெளியிடுவதற்கு முன்னதாக இக்குழுவிடம் முறையான சான்றிதழ் பெற வேண்டியது கட்டாயமாகும்: தொலைக்காட்சி, கேபிள் டிவி, வானொலி மற்றும் சமூக ஊடகங்களில் (Social Media) வெளியிடப்படும் விளம்பரங்களுக்கு முன்சான்றிதழ் அவசியம்.

வாக்குப்பதிவு நாள் மற்றும் அதற்கு முந்தைய நாளில் செய்தித்தாள்களில் வெளியிடப்படும் விளம்பரங்களுக்கும் அனுமதி பெற வேண்டும். ஒட்டுமொத்தக் குறுஞ்செய்திகள் (Bulk SMS) மற்றும் குரல் வழிச் செய்திகளுக்கும் (Voice Messages) முன்அனுமதி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

முன்சான்றிதழ் இல்லாமல் வெளியிடப்படும் விளம்பரங்கள் தேர்தல் நடத்தை விதிமீறலாகக் கருதப்படும். தவறான தகவல்களைப் பரப்புதல் அல்லது போலிச் செய்திகளை உருவாக்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சட்டப்படியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் எச்சரித்துள்ளார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads



Arputham Hospital





Thoothukudi Business Directory