» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி வ.உ.சி துறைமுகத்தில் மெய்நிகர் மாதிரி செயலி அறிமுகம்: இந்தியாவில் முதல் முறை..!

வியாழன் 12, மார்ச் 2026 4:48:45 PM (IST)



தூத்துக்குடி வ.உ.சி.துறைமுகம் இந்தியாவின் முதல் துறைமுகமாக "துறைமுக மெய்நிகர் மாதிரி செயலி” என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி சாதனை படைத்துள்ளது.

மத்திய துறைமுகங்கள், கப்பல் போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர்  சர்பானந்தா சோனோவால் 23.02.2026 அன்று இத்திட்டத்தை தொடங்கி வைத்தார. இந்திய கடல்சார் தொலைநோக்குப் பார்வை 2030 (Maritime India Vision 2030) மற்றும் அம்ரித் கால் விஷன் 2047 ஆகியவற்றின் கீழ், துறைமுகத்தின் செயல்பாட்டுத் திறன் மற்றும் உலகளாவிய போட்டித்திறனை மேம்படுத்துவதே இதன் முக்கிய நோக்கமாகும்.

இணைய தொழில்நுட்பம் (IoT) சார்ந்த சென்சார்கள், ட்ரோன் படமெடுப்பு மற்றும் CCTV வலையமைப்புகள் மூலம் துறைமுக நிலவரங்கள் நேரடியாகக் கண்காணிக்கப்படும். சரக்கு கையாளும் உபகரணங்களின் பராமரிப்பை முன்கூட்டியே கணிக்கவும் (Predictive Maintenance), இயந்திரப் கோளாறுகளைத் தவிர்க்கவும் AI தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது.

கப்பல் நகர்வுகள் மற்றும் சரக்கு கையாளும் திறனை மேம்படுத்தி, கப்பல்கள் காத்திருக்கும் நேரத்தைக் குறைக்கிறது. துறைமுகத்திற்குள் கப்பல்கள் வந்து திரும்பும் நேரம் (Turnaround Time) 25 சதவீதம் வரை குறையும். ஆற்றல் பயன்பாட்டைக் கண்காணிப்பதன் மூலம் கார்பன் வெளியேற்றம் குறைக்கப்பட்டு, சுற்றுச்சூழல் நிலைத்தன்மை உறுதி செய்யப்படும். "What-if" மாதிரி மூலம் அதிக தேவையுள்ள நேரங்கள் மற்றும் செயல்பாட்டுத் தடைகளை முன்கூட்டியே கணித்துத் தயாராக முடியும்.

துறைமுகத் தலைவர்  சுசாந்த குமார் புரோஹித் இது குறித்துக் கூறுகையில், இந்த டிஜிட்டல் ட்வின் முயற்சி துறைமுகத்தின் நவீனமயமாக்கல் பயணத்தில் ஒரு முக்கிய மைல்கல் என்றும், இது வ.உ.சி துறைமுகத்தை சர்வதேச தரத்திலான அறிவார்ந்த (Smart Port) துறைமுகமாக மாற்றும். தொலைநோக்குப் பார்வை 2030 திட்டத்தின் ஒரு முக்கியப் பகுதியாகும்.என்றும் தெரிவித்துள்ளார். 


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital








Thoothukudi Business Directory