» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்!

வியாழன் 12, மார்ச் 2026 10:29:05 AM (IST)

வேடநத்தம் மாணவி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட சம்பவத்திற்கு இந்திய மாணவர் சங்கம் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளது. 

தூத்துக்குடி மாவட்டம்,  குறுக்குச்சாலை பகுதியில் உள்ள பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வந்த அந்த மாணவி, நேற்று மாலை மர்ம நபர்களால் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார். இக்கொடூரச் சம்பவம் ஒட்டுமொத்த மாணவ சமுதாயத்திற்கும், பெண்களின் பாதுகாப்பிற்கும் விடப்பட்ட பெரும் சவாலாக அமைந்துள்ளது.

இது குறித்து இந்திய மாணவர் சங்கத்தின் தூத்துக்குடி மாவட்டக் குழு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:"தமிழகத்தில் தொடரும் இதுபோன்ற கொடூரச் செயல்கள் பெண்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கியுள்ளன. மாணவியைப் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த குற்றவாளிகளை மாவட்டக் காவல்துறை உடனடியாக அடையாளம் கண்டு கைது செய்ய வேண்டும். 

அவர்களுக்குக் கடுமையான தண்டனை பெற்றுத் தருவதை அரசு உறுதி செய்ய வேண்டும். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் மாவட்டக் குழு சார்பாக மாவட்டத் தலைவர் மாடசாமி வலியுறுத்தியுள்ளார்.


மக்கள் கருத்து

selvamMar 12, 2026 - 01:15:08 PM | Posted IP 162.1*****

only way of encounter

மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital







Thoothukudi Business Directory