» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குடும்பத் தகராறால் பெண் தூக்கிட்டுத் தற்கொலை: தூத்துக்குடி அருகே சோகம்!
வியாழன் 12, மார்ச் 2026 8:16:14 AM (IST)
தூத்துக்குடி அருகே குடும்பத் தகராறால் மனமுடைந்த பெண் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
தூத்துக்குடி முத்தையாபுரம் குமாரசாமி நகர் 3-வது தெருவைச் சேர்ந்தவர் பாக்கியராஜ். இவரது மனைவி செந்தூர்கனி (66). இவர்களது மகன் ஜேசுராஜ். கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜேசுராஜ் மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை அவரது மனைவி கண்டித்ததால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதில் கோபித்துக்கொண்ட ஜேசுராஜின் மனைவி, தனது பெற்றோர் வீட்டிற்குச் சென்றுவிட்டார். மகன் மற்றும் மருமகளுக்கு இடையே ஏற்பட்ட இந்த தகராறால் மனவேதனையில் இருந்து வந்த செந்தூர்கனி நேற்று வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து முத்தையாபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் எதிரொலி: கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முடங்கியது – கோடிக்கணக்கில் தேக்கம்!
வியாழன் 12, மார்ச் 2026 4:00:59 PM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு இருப்பு நிலவரம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆலோசனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:45:11 PM (IST)

மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!!
வியாழன் 12, மார்ச் 2026 3:16:41 PM (IST)

அமெரிக்கா - இஸ்ரேல் போரை நிறுத்த வலியுறுத்தி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்!
வியாழன் 12, மார்ச் 2026 11:23:24 AM (IST)

மாணவி கொலை வழக்கு: ஆய்வாளர் சஸ்பெண்ட் - நெல்லை சரக டிஐஜி உத்தரவு
வியாழன் 12, மார்ச் 2026 10:58:24 AM (IST)

பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்!
வியாழன் 12, மார்ச் 2026 10:29:05 AM (IST)









