» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி : அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்பு!
வியாழன் 12, மார்ச் 2026 8:06:13 AM (IST)

தூத்துக்குடியில் நடைபெற்ற இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் 79-வது ஆண்டு தொடக்க விழா மற்றும் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சியில் தமிழக சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் சிறப்பு அழைப்பாளராகக் கலந்து கொண்டார்.
தூத்துக்குடியில் உள்ள தனியார் விடுதியில் நடைபெற்ற இந்த விழாவிற்கு இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாவட்டத் தலைவர் மீராசா தலைமை தாங்கினார். மாவட்டச் செயலாளர் பாசில் அஷ்ரப், பொருளாளர் திரேஸ்புரம் மீராசா, வர்த்தக அணி அமைப்பாளர் எம்.எஸ்.எப். ரகுமான், மகளிர் அணி அமைப்பாளர் பிர்தவ்ஸ் மற்றும் கவுன்சிலர் மும்தாஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட வழக்கறிஞர் பிரிவு அமைப்பாளர் முகமது சுலைமான் அனைவரையும் வரவேற்றார். ஜாமியா பள்ளிவாசல் தலைமை இமாம் அத்துல் அலீம் சிறப்புத் துவா ஓத, அனைவரும் நோன்பு திறந்து சமூக நல்லிணக்கத்தைப் பறைசாற்றினர்.
நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் கீதா ஜீவன் தெரிவித்ததாவது: "மக்களிடையே பிரிவினையை உண்டாக்க வேண்டும் என்று சிலர் திட்டமிட்டுச் செயல்படுகின்றனர். அவர்களின் எண்ணத்தை முறியடித்து நாம் ஒற்றுமையாக இருக்க வேண்டும். தமிழக முதல்வர் அனைத்துச் சமுதாயத்தினருக்குமான திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். சுமார் 4,000 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது. 12 லட்சம் கோடி ரூபாய் முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளன. அனைவரும் ஒற்றுமையாகப் பணியாற்றினால் தமிழ்நாடும் தமிழ் சமுதாயமும் மேலும் முன்னேறும்" என்று அவர் பேசினார்.
இவ்விழாவில் தூத்துக்குடி மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி, மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், கிறிஸ்துவ வாழ்வுரிமை இயக்க மாநில அமைப்புச் செயலாளர் சுந்தரி மைந்தன், எஸ்டிபிஐ மாவட்டத் தலைவர் ஷேக் அசரப் அலி பைஜி, இந்திய கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் கரும்பன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்டச் செயலாளர் ஆறுமுகம், காங்கிரஸ் மாநில செயற்குழு உறுப்பினர் முரளிதரன் உள்ளிட்ட கூட்டணிக் கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் ஜாமியா பள்ளிவாசல் முன்னாள் துணைத் தலைவர் சிராஜூதீன் நன்றி கூறினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் எதிரொலி: கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முடங்கியது – கோடிக்கணக்கில் தேக்கம்!
வியாழன் 12, மார்ச் 2026 4:00:59 PM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு இருப்பு நிலவரம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆலோசனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:45:11 PM (IST)

மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!!
வியாழன் 12, மார்ச் 2026 3:16:41 PM (IST)

அமெரிக்கா - இஸ்ரேல் போரை நிறுத்த வலியுறுத்தி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்!
வியாழன் 12, மார்ச் 2026 11:23:24 AM (IST)

மாணவி கொலை வழக்கு: ஆய்வாளர் சஸ்பெண்ட் - நெல்லை சரக டிஐஜி உத்தரவு
வியாழன் 12, மார்ச் 2026 10:58:24 AM (IST)

பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்!
வியாழன் 12, மார்ச் 2026 10:29:05 AM (IST)









