» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
விவாகரத்து பெற்ற பெண்ணிற்கு கொலை மிரட்டல் : முன்னாள் கணவர் கைது!!
வியாழன் 12, மார்ச் 2026 8:03:48 AM (IST)
கோவில்பட்டியில் விவாகரத்து பெற்ற பெண்ணை அவதூறாகப் பேசி, கொலை மிரட்டல் விடுத்த வழக்கில் அவரது முன்னாள் கணவரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி காட்டுநாயக்கர் தெருவைச் சேர்ந்தவர் சேர்மக்கனி (32). இவருக்கும், இனாம் மணியாச்சி பகுதியைச் சேர்ந்த ஒரு பெண்ணுக்கும் கடந்த 2017-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை உள்ளது.
இதற்கிடையே, கடந்த 2024-ஆம் ஆண்டு ஒரு கொலை வழக்கில் கைதான சேர்மக்கனி சிறைக்குச் சென்றார். இதனால் அவரது மனைவி நீதிமன்றம் மூலம் சட்டப்பூர்வமாக விவாகரத்து பெற்றார். விவாகரத்துக்குப் பிறகு, அந்தப் பெண் தனது மகளுடன் பெற்றோர் வீட்டில் வசித்து வருகிறார்.
இந்நிலையில், சிறையிலிருந்து வெளியே வந்த சேர்மக்கனி, தனது முன்னாள் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார். அவரை ஆபாசமான வார்த்தைகளால் திட்டியதுடன், தாக்கி கொலை மிரட்டலும் விடுத்ததாகக் கூறப்படுகிறது.
பாதிக்கப்பட்ட பெண் இது குறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார், சேர்மக்கனியைப் புதன்கிழமை அன்று கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

போர் எதிரொலி: கோவில்பட்டி கடலை மிட்டாய் ஏற்றுமதி முடங்கியது – கோடிக்கணக்கில் தேக்கம்!
வியாழன் 12, மார்ச் 2026 4:00:59 PM (IST)

தூத்துக்குடியில் எரிவாயு இருப்பு நிலவரம் : ஆட்சியர் க.இளம்பகவத் ஆலோசனை!
வியாழன் 12, மார்ச் 2026 3:45:11 PM (IST)

மாணவி படுகொலை சம்பவத்தில் குற்றவாளிகள் மீது கடும் நடவடிக்கை : மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!!
வியாழன் 12, மார்ச் 2026 3:16:41 PM (IST)

அமெரிக்கா - இஸ்ரேல் போரை நிறுத்த வலியுறுத்தி முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் போராட்டம்!
வியாழன் 12, மார்ச் 2026 11:23:24 AM (IST)

மாணவி கொலை வழக்கு: ஆய்வாளர் சஸ்பெண்ட் - நெல்லை சரக டிஐஜி உத்தரவு
வியாழன் 12, மார்ச் 2026 10:58:24 AM (IST)

பிளஸ்-2 மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலை: இந்திய மாணவர் சங்கம் கண்டனம்!
வியாழன் 12, மார்ச் 2026 10:29:05 AM (IST)









