» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடி எஸ்.பி. அலுவலகத்தில் டிஜிட்டல் தகவல் பலகை திறப்பு: பொதுமக்கள் வரவேற்பு

செவ்வாய் 10, மார்ச் 2026 7:54:18 AM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்துக் காவல் நிலையங்களிலும் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்படுபவர்களின் விபரங்களை அறிந்துகொள்ளும் வகையில், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புதிய டிஜிட்டல் தகவல் பலகை வைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மதன் உத்தரவின் பேரில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பி.என்.எஸ்.எஸ். (BNSS) பிரிவு 37-ன் படி, காவல் நிலையங்களில் கைது செய்யப்படும் நபர்களின் விபரங்களை வெளிப்படைத் தன்மையுடன் பொதுமக்கள் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற நோக்கில் இது அமைக்கப்பட்டுள்ளது. இந்தத் திரையில் காவல் நிலையத்தின் பெயர் மற்றும் கைது செய்யப்பட்டவரின் விபரங்கள் தொடர்ந்து ஒளிபரப்பப்படும்.

பொதுமக்கள் மற்றும் கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்கள் தங்களுக்குத் தேவையான விபரங்களை இதன் மூலம் உடனுக்குடன் தெரிந்துகொள்ள முடியும். இத்தகைய வெளிப்படைத் தன்மையால், காவல் நிலையங்களில் சட்டவிரோதக் கைது நடவடிக்கைகள் மற்றும் காவல் மரணங்கள் ஏற்படுவதைத் தவிர்க்க நல்ல வாய்ப்பாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. காவல்துறையின் இந்த நவீன மற்றும் வெளிப்படையான முயற்சிக்குப் பொதுமக்கள் மத்தியில் பலத்த வரவேற்பு கிடைத்துள்ளது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads


Arputham Hospital





Thoothukudi Business Directory