» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆம்னி பேருந்து மோதி லாரி ஓட்டுநர் மீது உயிரிழப்பு

செவ்வாய் 10, மார்ச் 2026 7:42:31 AM (IST)

கோவில்பட்டி அருகே மதுரை - திருநெல்வேலி தேசிய நெடுஞ்சாலையில் ஆம்னி பேருந்து மோதிய விபத்தில், கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் பரிதாபமாக உயிரிழந்தார்.

கன்னியாகுமரி மாவட்டம், வாணியக்குடி கல்குளம் பகுதியைச் சேர்ந்த ஜெகன் (48), லாரி ஓட்டுநராகப் பணியாற்றி வந்தார். இவர் கோயம்புத்தூரிலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றிக்கொண்டு லாரியில் திருநெல்வேலி நோக்கிச் சென்று கொண்டிருந்தார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை கோவில்பட்டியை அடுத்த ஆவல்நத்தம் விலக்கு அருகே லாரியை ஓரம் நிறுத்திய ஜெகன், சாலையைக் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக வந்த ஆம்னி பேருந்து எதிர்பாராதவிதமாக அவர் மீது மோதியது.

விபத்தில் பலத்த காயமடைந்த ஜெகனை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காகக் கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். இருப்பினும், அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்துக் கோவில்பட்டி கிழக்கு காவல் நிலைய போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய ஆம்னி பேருந்து ஓட்டுநர் தினகர் ராஜிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory