» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தூத்துக்குடியில் சர்வதேச மகளிர் தின விழா சிறப்புச் சொற்பொழிவு!
ஞாயிறு 8, மார்ச் 2026 7:57:01 PM (IST)

தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் மற்றும் புத்தக வாசிப்பு நற்பணி மன்றம் சார்பில், சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு புத்தகப் பார்வை மற்றும் சிறப்புச் சொற்பொழிவு நிகழ்ச்சி தூத்துக்குடியில் நடைபெற்றது.
நிகழ்ச்சிக்குத் தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்ற மாநகரக் கிளைச் செயலாளர் ஆ. மாரிமுத்து வரவேற்புரையாற்றினார். வழக்கறிஞர் ஐ.பெ. பாலசேகர் தலைமை வகித்து உரையாற்றுகையில், கலை இலக்கியப் பெருமன்றத்தின் செயல்பாடுகள், ஜீவாவின் இலக்கியப் பங்களிப்பு மற்றும் மகளிர் தினத்தின் முக்கியத்துவம் குறித்து விரிவாகப் பேசினார்.
சிறப்புரை: தூத்துக்குடி மாவட்ட ரோட்டரி சங்கத் தலைவர் T. மலர்விழி சிறப்பு அழைப்பாளராகக் கலந்துகொண்டு சிறப்பித்தார். அவர் பேசுகையில், "பெண்களின் வளர்ச்சிக்குத் தெளிவான சிந்தனை, தைரியம், நேர்மை மற்றும் நன்றியுணர்வு ஆகியவை மிக அவசியம்" என்று வலியுறுத்தினார்.
தொடர்ந்து நடைபெற்ற புத்தகப் பார்வை நிகழ்ச்சியில், "பேத்தி கேட்ட கதை" எனும் சிறுகதை நூல் குறித்து ஏ.பி.சி. மகாலட்சுமி கல்லூரி கணிதவியல் துறை மாணவிகள் தேவி மற்றும் துர்கா தேவி ஆகியோர் தாங்கள் வாசித்து உணர்ந்த கருத்துகளைப் பகிர்ந்து கொண்டனர்.
எழுத்தாளர் பேராசிரியர் கணியன் செல்வராஜ் தனது ஏற்புரையில், "மனிதர்கள் இயற்கையோடு இணைந்து வாழப் பழக வேண்டும். வன உயிரினங்களைப் பாதுகாப்பதோடு, அவற்றிடமிருந்து மனிதர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் நிறைய உள்ளன" என்று தெரிவித்தார்.
இவ்விழாவில் இலக்கிய ஆர்வலர்கள் செல்ல மாரியப்பன், லோகநாதன், பத்மநாதன், பாலமுருகன், ஆசிரியர் ராஜகுமார் சாமுவேல், குமிழ்முனை சைமன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளைப் புத்தக வாசிப்பு நற்பணி மன்ற அமைப்பாளர் அ. ரவி மற்றும் ஸ்பிக் செல்வின் ஆகியோர் சிறப்பாகச் செய்திருந்தனர். நிறைவாகத் தருவைக்குளம் கிளைச் செயலாளர் லாரன்ஸ் நன்றியுரையாற்றினார்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடியில் நாளை முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம்: பலத்த பாதுகாப்பு; கட்சி நிர்வாகிகள் உற்சாகம்!
சனி 11, ஏப்ரல் 2026 8:40:09 AM (IST)

ஸ்டாலின் ஆட்சியின் சாதனைகளே எங்களின் பலம்: தூத்துக்குடி வீதிகளில் அமைச்சர் கீதா ஜீவன் பிரசாரம்
சனி 11, ஏப்ரல் 2026 8:35:01 AM (IST)

இலவசங்கள் வேண்டாம்; தற்சார்பு வாழ்வே இலக்கு: தூத்துக்குடியில் சீமான் பிரசாரம்
சனி 11, ஏப்ரல் 2026 8:18:29 AM (IST)

தூத்துக்குடி தொகுதி வேட்பாளர்கள் சின்னம் பட்டியல்!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 8:12:53 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் வாக்குச்சாவடிகள் 1868 ஆக உயர்வு: இறுதி பட்டியலில் 13.88 லட்சம் வாக்காளர்கள்..!
வெள்ளி 10, ஏப்ரல் 2026 4:57:32 PM (IST)

மீன்பிடி தடைக்காலம் ஏப்ரல் 15 முதல் அமல்: தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
வெள்ளி 10, ஏப்ரல் 2026 3:49:01 PM (IST)







