» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? பெ.இராஜேஷ் செல்வரதி நூல் வெளியீட்டு விழா

ஞாயிறு 8, மார்ச் 2026 7:49:27 PM (IST)



கபாடபுரமும், தென்மதுரையும் இங்கே! குமரிக்கண்டம் எங்கே? என்ற தலைப்பில் தூத்துக்குடியினை சேர்ந்த வரலாறு மற்றும் தொல்லியல் ஆர்வலர்  பெ.இராஜேஷ் செல்வரதியின் நூல் வெளியீட்டு விழா நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைகழக வளாகத்தின் தொல்லியல்துறை அரங்கத்தில் வைத்து நடைபெற்றது. 

முதல் புத்தகத்தினை தேர்வு கட்டுப்பாட்டாளர் முனைவர். பாலசுப்பிரமணியன்  வெளியிட அதனை 'முத்தமிழ் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் விருது பெற்ற முனைவர். செல்லப்பா  பெற்றுக் கொண்டார். இந்த விழாவில் சிறப்பு விருந்தினர்களாக வரலாற்று வித்வான் தி.வை.சதாசிவ பண்டாரத்தாரின் பேரனான சிவசுப்பிரமணியன்(சிதம்பரம்), குலாம் அகம்மது (காயல்பட்டினம் வரலாற்று பாதுகாப்பு கழகம்), கருப்பசாமி(அனுசக்தி துறை-பழையகாயல்). யாக்கை அறக்கட்டளை குழுவினர், செல்வின்(அழகப்பா பல்கலைக்கழகம் - தூத்துக்குடி), மாரிமுத்து(எழுத்தாளர்) ஆகியோர் பங்குபெற்றனர்.

விழாவினை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக மாணவ செல்வங்கள் திறம்பட முன்னெடுத்து சிறப்பித்தனர்.  தொல்லியல் துறைத் தலைவர்(பொருப்பு) முனைவர். சுதாகர், தொல்லியல்துறை உதவி பேராசிரியர். முனைவர். மதிவாணன், உதவி போராசிரியர். முனைவர் முருகன், உதவி பேராசிரியை முனைவர் சந்தியா, உதவி பேராசிரியர். ரமேஷ் பெரியசாமி, ஆகியோர் கருத்துரைகள் மற்றும் வாழ்த்துரைகள் வழங்கி விழாவினை சிறப்பித்தனர்

இவர் சுமார் மூன்று ஆண்டுகளாக நமது தருவைக்குளம் கிராமத்தின் சுற்று வட்டாரப் பகுதிகளில் ஏராளமான தொல்லியல் தொன்மங்களை கண்டெடுத்து மாவட்ட நிர்வாகம் வாயிலாக ஆவணப்படுத்தியதன் அடிப்படையில் நமது இந்திய மற்றும் தமிழக தொல்லியல் துறையினரின் பரிந்துரையின் கீழ் நமது மாநில அரசு 14.03.2025ம் தேதி 2025-26ம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கையில் பட்டினமருதூர் பகுதியினை சேர்ந்த சுமார் 300ஏக்கர் பரப்பளவினை தொல்லியல் தளமாக நிதி ஒதுக்கி அறிவித்து நமது தமிழ் சமூகத்திற்கு பெரும் நம்பிக்கையினை கொடுத்தது என்பது நாம் அறிந்ததே. 

தொடர்ந்து அப்பகுதியில் முறையான புல நிலவரங்கள் ஆய்வு செய்து, அறிக்கைகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன என்றும்,  இதன் அடிப்படையில் வெகு விரைவில் தொல்லியல் அகழாய்வுகள் ஆரம்பம் ஆகவுள்ளன என்ற இனிய தகவலோடு, கூடுதலாக தான் இதுவரை பயணித்து கடந்து வந்த அனுபவங்கள், அறிவியல் ஆதாரங்கள், தொன்மையான வரலாற்று சுவடுகள் மற்றும் வரைபடங்கள், இதுவரை மாவட்ட நிர்வாகம் வாயிலாக பதிவு செய்யப்பட்டுள்ள கோரிக்கைகள் குறித்த விபரங்களை ஆவணமாக்கி அதனை நம் தமிழ் சமூகம் குறிப்பாக வரலாறு மற்றும் தொல்லியல் துறை மாணவச் செல்வங்கள் முறையாக அவற்றை பகுப்பாய்வுகள் பல செய்து நமது தமிழர்களின் உண்மையான வரலாற்றினை மீட்டெடுத்திட வேண்டும் என்ற ஒற்றை நோக்கத்தோடு ஆவணப்படுத்தப்பட்ட தரவுகளுக்கும், தமிழ்களின் நீண்ட கால வரலாற்றின் புதிர்களாக உள்ள நம் கடல் கொண்ட தென்மதுரை மற்றும் கபாடபுரம் ஆகியவற்றிற்கும் உள்ள இணைப்புகளை ஓர் கேள்விகளின் தொகுப்புகளாக புத்தகம் வடிவில் வெளியிட்டு உள்ளார் என்றும்,

மேலும் இந்த தரவுகளை அறிவியல் பூர்வமாக செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் வாயிலாக தானே தொகுத்து அதனை சுமார் 20 நிமிட முன்னோட்ட காணொளியாக நாளது தேதியில் https://youtu.be/rKJpn1_5Hts (Youtube channel - RAJESH SELVARATHI PERIASAMY) என்ற இணைப்பில் வெளியிட்டு உள்ளார் என்றும் தகவல் தெரிவித்தார். 
 
தனது நூலினை படித்துணர்ந்தும், இந்த காணொளியினை கண்டுணர்ந்தும், நமது வரலாற்றின் புதிர்களை அறிந்து, அவரவர் தங்களின் கருத்துக்களை பகிர்ந்து, தமிழர்கள் என்ற ஒற்றைப் பார்வையில் குவிந்து, விரைவில் நம் பாண்டியர்களின் இருண்ட கால வரலாற்று பெருமைகளை தொழில் நுட்பங்களின் தரவுகளோடு நிரூபணம் செய்து இந்த பாருலகிற்கு வெளிச்சம் போட்டு காட்டிட முனைந்திட வேண்டும் என்ற தனது கோரிக்கைகளோடு நம் தமிழ் அன்னையின் பாதம் பணிந்து சமர்ப்பிப்பதாக இந்நூலின் ஆசிரியராகவும், பதிப்பாளராகவும் விளங்கிடும் பெ.இராஜேஷ் செல்வரதி தெரிவித்தார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital



Thoothukudi Business Directory