» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு பேரணி: டி.எஸ்.பி ஜெகநாதன் தொடங்கி வைத்தார்

ஞாயிறு 8, மார்ச் 2026 1:32:30 PM (IST)



உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கோவில்பட்டியில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது.

கோவில்பட்டி ரோட்டரி சங்கம், அரவிந்த் கண் மருத்துவமனை மற்றும் கே.ஆர். கல்வி நிறுவனங்கள் ஆகியவை இணைந்து நடத்திய இப்பேரணி, கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பிருந்து தொடங்கியது. இதற்குக் கோவில்பட்டி ரோட்டரி சங்கத் தலைவர் ராஜ்குமார் தலைமை வகித்தார். பொன்னூஸ் நேச்சுரல்ஸ் நிறுவனர் பொன்னுச்சாமி, ரீஜென்ட் உரிமையாளர் ஹரிபாலன், ரோட்டரி மாவட்ட புரவலர் விநாயகா ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் ஹரிணி வரவேற்றார்.

கோவில்பட்டி காவல் துணை கண்காணிப்பாளர் ஜெகநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு, பேரணியைக் கொடியசைத்துத் தொடங்கி வைத்தார். கே.ஆர். கல்வி நிறுவனங்களைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான மாணவர்கள் கைகளில் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி, பிரதான சாலை வழியாக ஊர்வலமாகச் சென்றனர். இப்பேரணி ஆர்.சி. மேல்நிலைப் பள்ளியைச் சென்றடைந்தது.

பேரணியின் நிறைவில் நடைபெற்ற கருத்தரங்கில், அரவிந்த் கண் மருத்துவமனை ஆலோசகர் டாக்டர் ராமகிருஷ்ணன் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பேசுகையில், "நாடு முழுவதும் மார்ச் 12-ம் தேதி உலக கண் நீர் அழுத்த நோய் விழிப்புணர்வு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இந்த நோயைக் கண்டறிவது மற்றும் தடுப்பது குறித்துப் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டியது அவசியம்" என்றார். இதையொட்டி ஒரு வார காலத்திற்குப் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

நிகழ்வில் அரவிந்த் கண் மருத்துவமனை மருத்துவர் முகைதீன் அப்துல் காதர், ரோட்டரி சங்கச் செயலாளர் பழனிக்குமார், கே.ஆர். கல்வி நிறுவனப் பேராசிரியர்கள், ரோட்டரி சங்க உறுப்பினர்கள் மற்றும் செவிலியர்கள் பலர் கலந்து கொண்டனர். நிறைவாக மருத்துவர் சுகன்யா நன்றி கூறினார்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital






Thoothukudi Business Directory