» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்ட தூத்துக்குடி பள்ளி மாணவர்கள்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 4:45:53 PM (IST)

தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவிகள் கீழடி அருங்காட்சியகத்தை பார்வையிட்டனர்.
தூத்துக்குடி பாரதியார் வித்யாலயம் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியர்கள் சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு தொல்லியல் துறையின் கீழடி அருங்காட்சியகம், மதுரை திருமலை நாயக்கர் மஹால் மற்றும் திருப்பரங்குன்றம் போன்ற இடங்களுக்கு கல்வி சுற்றுலா சென்று வந்தனர்.
அகழாய்வுகளில் கண்டெடுக்கப்பட்ட பொருட்களை பாதுகாத்து மக்களுக்கு அறிமுகப்படுத்தும் விதமாக அருங்காட்சியகம் அமைக்கப்பட்டிருந்தது. பானைகள், இரும்பு கருவிகள், நாணயங்கள், விவசாயக் கருவிகள் போன்றவை கண்ணாடி கூடுகளில் பாதுகாக்கப்பட்டு பத்திரப்படுத்தப்பட்டு இருந்தது. மாணவர்களிடையே வரலாற்று பற்றை ஊக்குவிக்கும் விதமாக அமைந்திருந்தது. அடுத்ததாக மதுரையில் அமைந்துள்ள நாயக்கர் வம்சத்தின் புகழ்பெற்ற அரசரான திருமலை நாயக்கரால் கட்டப்பட்ட நாயக்கர் மஹாலை கண்டு களித்தனர்.
வரலாற்றுப் பெருமையை கண்டு களிக்க வந்த அயல்நாட்டினருடன் சேர்ந்து மாணவர்கள் புகைப்படம் எடுத்து மகிழ்ந்தனர். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் முதலாவது வீடான திருப்பரங்குன்றத்திற்கு சென்று முருகனை தரிசித்து கல்வி சுற்றுலா உடன் ஆன்மீக சுற்றுலா வையும் மாணவர்கள் இணைத்து இனிதே நிறைவு செய்து மிகுந்த மகிழ்ச்சியுடன் மீண்டும் பள்ளி வந்து சேர்ந்தனர். சுற்றுலா ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் தட்சிணாமூர்த்தி முதுகலை ஆசிரியர்கள் மரகதவள்ளி, அங்காள ஈஸ்வரி, சுப்பிரமணிய சுபாஷ் மற்றும் அருள்முருகன் ஆகியோர் செய்திருந்தனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் கடித்ததில் பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு: தூத்துக்குடி அருகே சோகம்
புதன் 1, ஏப்ரல் 2026 8:28:58 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளி ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மனு!
புதன் 1, ஏப்ரல் 2026 8:15:42 AM (IST)

சட்டவிரோத மது விற்பனை: பெண் உட்பட இருவர் கைது - 61 மது பாட்டில்கள் பறிமுதல்
புதன் 1, ஏப்ரல் 2026 8:02:29 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் இழுபறி!
புதன் 1, ஏப்ரல் 2026 7:48:48 AM (IST)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)