» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
மத்திய அரசைக் கண்டித்து பிப்.12-ல் வேலைநிறுத்தம்: தூத்துக்குடியில் தொழிற்சங்கங்கள் ஆயத்த மாநாடு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 4:33:55 PM (IST)
மத்திய அரசின் கொள்கைகளைக் கண்டித்து பிப். 12-ல் நடைபெறும் மாபெரும் வேலை நிறுத்தம் தொடர்பாக தூத்துக்குடியில் தொழிற்சங்கங்களின் ஆயத்த மாநாடு நடைபெற்றது.
மத்திய மோடி அரசின் தொழிலாளர், விவசாயி மற்றும் மக்கள் விரோதக் கொள்கைகளைக் கண்டித்து, வரும் பிப்ரவரி 12-ஆம் தேதி தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் பொது வேலைநிறுத்தம் மற்றும் மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. இதற்கான ஆயத்த மாநாடு தூத்துக்குடி அரசு ஊழியர் சங்க கட்டிடத்தில் திமுக தொழிற்சங்கத் தலைவர் சுசி. ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது.
இந்த ஆலோசனைக் கூட்டத்தில் ரசல்,பேச்சிமுத்து (சிஐடியு), லோகநாதன், கிருஷ்ணராஜ் (ஏஐடியுசி), போர்ட் சத்யா, ராஜ்குமார் (எச்எம்எஸ்), சகாயம், மின்னல் அம்ஜத் (ஏஐசிசிடியு), அலெக்சாண்டர், சரவணன் (யுஎன்யூசி), முருகன், கருப்பசாமி (எல்பிஎஃப்), லெனின் குமார் (எஸ்கேஎம்), ராஜகோபால், ராஜு (ஐஎன்டியுசி) உள்ளிட்ட அனைத்து தொழிற்சங்க நிர்வாகிகள் மற்றும் ஐக்கிய விவசாய முன்னணியினர் திரளாகக் கலந்து கொண்டனர்.
இந்த வேலைநிறுத்தப் போராட்டத்திற்காகத் துறைமுகம், மின் விநியோகம், போக்குவரத்து, தெர்மல், என்.டி.பி.எல், பாரதி கூட்டுறவு, தாரங்கதாரா கெமிக்கல்ஸ் உள்ளிட்ட பல்வேறு பொதுத்துறை மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு ஏற்கனவே தொழிற்சங்கங்கள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
இதனால் ஆட்டோ, வேன் மற்றும் டாக்ஸிகள் ஓடாது. வங்கி மற்றும் இன்சூரன்ஸ் நிறுவனங்கள் மூடப்படும். உப்பளம், தீப்பட்டி மற்றும் கட்டுமானத் தொழில்கள் முழுமையாக ஸ்தம்பிக்கும்.
வேலைநிறுத்தத்தின் நோக்கத்தை மக்களிடம் கொண்டு செல்ல, பிப்ரவரி 4, 5, 6, 8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் மாவட்டம் முழுவதும் 50 இடங்களில் தெருமுனை கூட்டங்கள் நடத்தப்பட உள்ளன. மேலும், போராட்டத்திற்கு ஆதரவு கோரி 50,000 துண்டுப் பிரசுரங்கள் பொதுமக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.
பிப்ரவரி 12-ஆம் தேதி வேலைநிறுத்த நாளன்று தூத்துக்குடி, கோவில்பட்டி, திருச்செந்தூர், விளாத்திகுளம், கயத்தார், திருவைகுண்டம் ஆகிய 6 முக்கிய மையங்களில் மறியல் போராட்டம் நடைபெறும். இதில் 3000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்களும் விவசாயிகளும் பங்கேற்க உள்ளதாகத் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் கடித்ததில் பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு: தூத்துக்குடி அருகே சோகம்
புதன் 1, ஏப்ரல் 2026 8:28:58 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளி ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மனு!
புதன் 1, ஏப்ரல் 2026 8:15:42 AM (IST)

சட்டவிரோத மது விற்பனை: பெண் உட்பட இருவர் கைது - 61 மது பாட்டில்கள் பறிமுதல்
புதன் 1, ஏப்ரல் 2026 8:02:29 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் இழுபறி!
புதன் 1, ஏப்ரல் 2026 7:48:48 AM (IST)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)