» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
குளத்தில் தவறி விழுந்து இளைஞா் உயிரிழப்பு
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 10:08:27 AM (IST)
சாத்தான்குளம் அருகே குளத்தில் தவறி விழுந்த இளைஞா் உயிரிழந்தாா்.
தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை, சவேரியாா்புரத்தைச் சோ்ந்தவா் பொன்ராஜ் மகன் ஜெபசீலன் (26), காா் ஓட்டுநர். அதே பகுதியைச் சோ்ந்த இவரது நண்பரான ஜேசுராஜுடன், சாத்தான்குளம் அருகேயுள்ள பனைகுளத்தைச் சோ்ந்த ஜெலஸ்டின், வசவப்பநேரியைச் சோ்ந்த அசோக் ஆகியோரைப் பாா்ப்பதற்காக பேய்குளத்திற்கு சென்றனா்.
பின்னா், முசலைக்குளம் பகுதியில் 4 பேரும் மது அருந்தியுள்ளனா். அப்போது, வாந்தி எடுத்த ஜெபசீலன், குளத்தில் முகம் கழுவச் சென்றபோது, தவறி விழுந்து நீரில் மூழ்கியுள்ளாா். இதையடுத்து, அவரது நண்பா்கள், போலீசார் மற்றும் தீயணைப்புத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனா்.
சாத்தான்குளம் தீயணைப்பு நிலைய வீரா்கள், போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று பாா்த்தபோது, நீரில் மூழ்கி ஜெபசீலன் உயிரிழந்தது தெரியவந்தது. போலீசார் அவரது சடலத்தை மீட்டு கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். இது குறித்து, சாத்தான்குளம் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

நாய் கடித்ததில் பிளஸ்-1 மாணவி உயிரிழப்பு: தூத்துக்குடி அருகே சோகம்
புதன் 1, ஏப்ரல் 2026 8:28:58 AM (IST)

கழுகாசலமூர்த்தி கோவில் பங்குனி உத்திரத் திருவிழா தேரோட்டம்: ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்!
புதன் 1, ஏப்ரல் 2026 8:20:51 AM (IST)

மாணவி கொலை வழக்கு: குற்றவாளி ஜாமீனை ரத்து செய்யக் கோரி மதுரை உயர்நீதிமன்றத்தில் பெற்றோர் மனு!
புதன் 1, ஏப்ரல் 2026 8:15:42 AM (IST)

சட்டவிரோத மது விற்பனை: பெண் உட்பட இருவர் கைது - 61 மது பாட்டில்கள் பறிமுதல்
புதன் 1, ஏப்ரல் 2026 8:02:29 AM (IST)

ஸ்ரீவைகுண்டம் தொகுதி: காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் நீடிக்கும் இழுபறி!
புதன் 1, ஏப்ரல் 2026 7:48:48 AM (IST)

திமுக வேட்பாளர் கீதா ஜீவனுக்கு சமத்துவ மக்கள் கழகம் ஆதரவு: தனித்துப் போட்டி முடிவு கைவிடப்பட்டது!
செவ்வாய் 31, மார்ச் 2026 8:32:17 PM (IST)