» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்க வருபவர்கள் காணாமல்போய்விடுவாா்கள்: அமைச்சர் கீதாஜீவன்
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 9:13:23 AM (IST)

தேர்தலுக்கு மட்டுமே மக்களை சந்திக்க வருபவர்கள் நீா்குமிழி போல் காணாமல்போய்விடுவாா்கள் என்று அமைச்சர் கீதாஜீவன் பேசினார்.
தூத்துக்குடியில், திமுக துணை பொது செயலாளரும், நாடாளுமன்ற குழு தலைவருமான கனிமொழி எம்.பி பிறந்தநாளை முன்னிட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா கலைஞர் அரங்கத்தில் நடைபெற்றது. மாநகர மகளிரணி அமைப்பாளர் ஜெயக்கனி வரவேற்றார்.
வடக்கு மாவட்ட திமுக செயலாளரும், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சருமான கீதாஜீவன் 151 பெண்களுக்கு தையல் மிஷின்களை வழங்கி பேசுகையில் "1989ல் பெண்களுக்கு சொத்தில் சமஉாிமை வழங்கியது கலைஞர் ஆட்சியில் தான் பெண்கள் ஏன் படிக்க வேண்டும் என்று ஆண்களை மட்டும் தான் முன்னர் படிக்க வைத்தார்கள். அதனை மாற்றியது திமுக தான்.
தொழில் தொடங்க பெண்களுக்கு 10 லட்சம் கடன் வழங்கப்படுகிறது அதில் 7.5 லட்சம் கட்டினால் போதும் 2.5 லட்சம் மானியம், அதே போல் ஆண்களுக்கும் வழங்கப்படுகிறது. தொழில் அதிபர்களாக வர வேண்டும் என்று திமுக ஆட்சியில் பயிற்சி அளித்து வருகிறோம். அதிக பெண் தொழிலதிபர்கள் இருப்பது தமிழ்நாட்டில் மட்டும்தான். தமிழ்நாட்டில் தொழில் வளர்ச்சி, பணப்புழக்கம் உள்ளது. என்று பேசினாா்.
மாநகர திமுக செயலாளர் ஆனந்தசேகரன், மாவட்ட துணைச்செயலாளர் ராஜ்மோகன் செல்வின், மாநில பொறியாளர் அணி துணைச்செயலாளர் அன்பழகன், மாநில பேச்சாளா் சரத்பாலா, மாவட்ட மகளிரணி அமைப்பாளர் கவிதாதேவி, மண்டல தலைவர் வக்கீல் பாலகுருசுவாமி, பகுதிச்செயலாளர்கள் மேகநாதன், ஜெயக்குமார், தகவல் தொழில்நுட்ப அணி துணை அமைப்பாளர்கள் பிரபு, அருணாதேவி, மாவட்ட மருத்துவ அணி தலைவா் அருண்குமாா், மாநகர இலக்கிய அணி அமைப்பாளர் ஜீவன் ஜேக்கப், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், துணை அமைப்பாளர் ரவி, கவுன்சிலர்கள் வைதேகி, சுப்புலட்சுமி, விஜயகுமாா், பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் செந்தில்குமார் பகுதி அணி அமைப்பாளா்கள் சந்தன முனிஸ்வரன் வட்டப்பிரதிநிதி பாஸ்கா், மற்றும் மணி, உள்பட பலர் கலந்து கொண்டனர்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)










அடுத்துFeb 2, 2026 - 11:34:13 AM | Posted IP 104.2*****