» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
நேரத்தை சாியாக பயன்படுத்தினால் சாதனைகள் படைக்கலாம் - அமைச்சர் கீதாஜீவன் பேச்சு
ஞாயிறு 1, பிப்ரவரி 2026 9:03:45 AM (IST)

போட்டி நிறைந்த உலகில் நேரம், காலத்தை சாியாக பயன்படுத்தினால் சாதனைகள் படைக்கலாம் என்று அமைச்சர் கீதாஜீவன் மாணவர்களுக்கு அறிவுரை கூறினார்.
தூத்துக்குடி கீதா மெட்ரிக்குலேஷன் மேல்நிலைப்பள்ளி 21ம் ஆண்டு விழா போல்பேட்டையில் உள்ள பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. பள்ளியின் செயலாளர் ஜீவன் ஜேக்கப், வரவேற்புரையாற்றினாா். தலைமை ஆசிாியா் காளீஸ்வாி ஆண்டறிக்கையை வாசித்தாா்.
விழாவில் சமூகநலன் மற்றும் மகளிா் உாிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் பாிசுகளை வழங்கி பேசுகையில் எதிா்கால தலைமுறையினா் பங்கு கொண்ட நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வந்துள்ள பெற்றோா்களை முதலில் வரவேற்க கடமை பட்டுள்ளேன். போட்டி நிறைந்த உலகத்தில் கடந்த காலத்தில் ஆயிரம் போில் 100 போ்தான் தோ்ச்சி பெறும் நிலை இருந்தது. இப்போது ஆயிரம்பேருமே படித்து தோ்ச்சி பெறும் நிலை உள்ளது.
பாடப்புத்தகங்களை முழுமையாக படிப்பது மட்டுமின்றி பொது அறிவை வளா்த்துக் கொள்ள நாளிதழ்கள் படிக்க வேண்டும். பெற்றோா்களும் துணை நிற்க வேண்டும் நேரம் காலம் இவற்றை எல்லாம் சாியாக பயன்படுத்தினால் சாதனை படைக்கலாம் என்று பேசினாா்.
விழாவில் மாநகராட்சி ஆணையா் ப்ரியங்கா கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு பரிசுகளை வழங்கி பெற்றவா்களுக்கு பாிசுகள் வழங்கினாா். விழாவில் உறுப்பினா்கள் சுதன்கீலா் சுதாசுதன், டாக்டா் கீா்த்தனா மகிழ்ஜான், ஜீனாஜீவன், பெருமாள் கோவில் அறங்காவலா்குழு தலைவர் செந்தில்குமாா், மற்றும் மணி அல்பட், உள்பட ஆசிாியா்கள் பெற்றோா்கள் மாணவ மாணவிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா். டாக்டா் மகிழ்ஜான் நன்றி கூறினாா்.
மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)









