» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

தூத்துக்குடியில் மீன்கள் வரத்து குறைவு: விலை உயர்வு

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 8:50:37 AM (IST)

தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப் படகு மீன்பிடித் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைவாக இருந்ததால், மீன்களின் விலை சற்று உயர்ந்து காணப்பட்டது.

தூத்துக்குடி திரேஸ்புரம் மீன்பிடித் துறைமுகத்திலிருந்து ஆழ்கடலுக்கு மீன் பிடிக்கச் சென்ற ஏராளமான நாட்டுப் படகு மீனவர்கள் நேற்று கரை திரும்பினர். அப்போது, மீன்களின் வரத்து குறைவாகவே இருந்தது. கடந்த வாரம் விலை சற்று குறைந்திருந்த நிலையில், நேற்று மீண்டும் உயர்ந்தது. அதன்படி, சீலா மீன் கிலோ ரூ. 1,000 வரையும், சூப்பர் நண்டு ரூ. 800 வரையும், விளை மீன், ஊழி, பாறை ரக மீன்கள் ரூ. 400 வரையும், வங்கனை மீன் ரூ. 120 வரையும், சாளை மீன் ஒரு கூடை ரூ. 1,500 வரையும் விற்பனையானது.



மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads

Arputham Hospital

CSC Computer Education








Thoothukudi Business Directory