» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

ஆம்னி வேனில் தீவிபத்து: வியாபாரி உயிர் தப்பினார்!

ஞாயிறு 1, பிப்ரவரி 2026 8:46:27 AM (IST)

கோவில்பட்டியில் சாலையில் சென்று கொண்டிருந்த வேன் திடீரென தீப்பிடித்து எரிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அதில் இருந்த வியாபாரி அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

கோவில்பட்டி வள்ளுவர் நகரை சேர்ந்தவர் அய்யம்பெருமாள் மகன் மாரியப்பன் (40). இவர் பழைய கார்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு பழைய ஆம்னி கார் ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளார். அதனை கோவில்பட்டி- சாத்தூர் சாலையில் உள்ள ஒரு ஒர்க்‌ஷாப்பில் பழுது பார்த்துவிட்டு, வாட்டர் சர்வீஸ் செய்வதற்காக தனது காரை மாரியப்பன் ஓட்டி சென்றுள்ளார்.

அப்போது திடீரென காரில் இருந்து புகை கிளம்பியது. சிறிது நேரத்தில் தீப்பிடித்து எரிந்தது. உடனே சுதாரித்துக் கொண்ட மாரியப்பன் உடனடியாக காரை சாலையோரம் நிறுத்திவிட்டு கீழே குதித்துவிட்டார். பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் கார் முழுவதும் தீ பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதுகுறித்து உடனடியாக கோவில்பட்டி தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள், தண்ணீரை பீய்ச்சி அடித்து அரை மணி நேரத்திற்கும் மேலாக போராடி தீயை அணைத்தனர். ஆனால் கார் முழுவதுமாக எரிந்து சேதமடைந்தது. இச்சம்பவம் குறித்து கோவில்பட்டி கிழக்கு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory