» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

கஞ்சா, போக்சோ வழக்கில் கைதான 2பேர் மீது தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை!

சனி 31, ஜனவரி 2026 8:56:17 PM (IST)

தூத்துக்குடி மாவட்டத்தில் கஞ்சா, போக்சோ வழக்கில் இருவர் இன்று ஒரே நாளில் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆத்தூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் கஞ்சா விற்பனைக்காக வைத்திருந்த வழக்கில் தூத்துக்குடியைச்  சேர்ந்த அருள்ராஜ் (28) மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் நடந்த போக்சோ வழக்கில் சம்பந்தப்பட்ட விளாத்திகுளத்தைச் சேர்ந்த   அப்பண்ணசாமி (37) ஆகியோர் மீது தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் (1982) கீழ் நடவடிக்கை எடுக்க  ஆத்தூர் மற்றும் விளாத்திகுளம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளருக்கு வேண்டுகோள் விடுத்தனர்.

அதன்பேரில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்  நை.சிலம்பரசன்  பரிந்துரையின்படி மாவட்ட ஆட்சித் தலைவர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மேற்படி  2பேரையும் இன்று (31.01.2026) போலீசார் தமிழ்நாடு தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனர்.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads





Arputham Hospital

CSC Computer Education




Thoothukudi Business Directory