» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
தமிழ்நாடு முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது : அமைச்சர் பி.கீதா ஜீவன் பேச்சு!
சனி 31, ஜனவரி 2026 12:38:16 PM (IST)

இந்தியாவிலேயே தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, தனிநபர் வருமானம், வாழ்வாதார உயர்வு உள்ளிட்டவற்றில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது என்று அமைச்சர் பி.கீதா ஜீவன் பேசினார்.
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டி நகராட்சி அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்பி.கீதா ஜீவன்மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்களை மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில்சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்பி.கீதா ஜீவன்தெரிவித்த்தாவது :மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக மாற்றுத்திறனாளிகளுக்கு இணைப்புச் சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர் வழங்கும் இனிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டிருக்க கூடிய அனைவருக்கும் வணக்கம். தொடர்ந்து இந்த நிகழ்வுதமிழ்நாடு முதலமைச்சர்ஆட்சிப் பொறுப்பேற்றதிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் வழங்க கூடிய பெட்ரோல் ஸ்கூட்டர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே வருகிறது. இந்த ஆண்டும் 300 ஸ்கூட்டர்கள் வழங்கப்பட்டுள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு ஸ்கூட்டர்கள் ஓட்ட முடியுமா? அதற்குரிய திறன் இருக்கிறதா? என்பதை முறையாக நேர்காணல் வைத்து அதன் மூலம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு,தமிழ்நாடு முதலமைச்சர்இரண்டு கால்களும் செயல் இழந்த நிலையில் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கும் இந்த ஸ்கூட்டரினை வழங்கி வந்தார்கள். அதன்பின், ஒரு கால்கள் இழந்த மற்றும் செயல்படாமல் இருந்த மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க உத்தரவிட்டதைத் தொடர்ந்து, வழங்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதிகளவிலான பயனாளிகள் பயனடைந்து வருகின்றனர் என சொல்லலாம்.
மேலும், அதிகளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கு நாங்கள் ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு செல்ல முடியவில்லை எனவும், நாங்கள் வீட்டில் முடங்கி இருக்கின்றோம் என்று குறிப்பிடுகின்ற நிலை மாறி வருகிறது. இத்திட்டத்தின் வாயிலாக எல்லாரும் பயனடைந்து வருகின்றனர். படிக்கின்றவர்களுக்கும், தொழில் செய்கின்றவர்களுக்கும் இந்த உதவி வழங்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஸ்கூட்டர்களின் மதிப்பும் ரூ.1,01,800 என்ற மதிப்பில் வழங்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாடு முதலமைச்சர்ஆட்சிப் பொறுப்பேற்ற முதல், இத்துறைக்கு 600 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. ஆனால் தற்பொழுது மாற்றுத்திறனாளி நலத்துறைக்கு மட்டும் ரூ. 1800 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. அதுபோல் கடந்த ஆண்டு, இ-சேவை மையத்தில் பதிவு செய்த அனைத்து நபர்களுக்கும் மாதாந்திர உதவித்தொகை வழங்குவதற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. மீண்டும் பதிவு செய்வதவர்களுக்கு, கட்டயமாக வழங்குவதற்கு உரிய நடவடிக்கை மேற்கொள்வார்கள்.
மேலும், TN – Rightsதிட்டத்தின் மூலம் நியமிக்கப்பட்டுள்ள தன்னார்வலர்கள் மற்றும் பணியாளர்கள் ஒவ்வொரு பகுதிகளுக்கும் சென்று மாற்றுத்திறனாளி நபர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களுக்கான அடையாள அட்டை, மாதாந்திர உதவித்தொகை, அரசின் எந்த திட்டத்தில் பயனடையலாம்? என்ன மாதிரியான உதவிகள் செய்யலாம்? என அனைத்து உதவிகளையும் செய்து வருகிறார்கள். தொடர்ந்து இந்த களப்பணிகள் நடைபெற்று கொண்டுத்தான் இருக்கிறது. குறிப்பாக வித்யபிரகாசம் பள்ளியில் படிக்கின்ற ஒரு மனவளர்ச்சி குன்றிய மாற்றுத்திறனாளியின் தாய் மதிய உணவு வழங்க கூறியதைத் தொடர்ந்து, நான்தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களிடம் வைத்த கோரிக்கையின் அடிப்படையில் இப்பொழுது அந்தப் பள்ளியில் மதிய உணவு வழங்கப்பட்டு வருகிறது.
நமக்கு என்னென்ன தேவைகள் இருக்கின்றதோ, அதனைதமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் கவனத்திற்கு கொண்டுச் செல்லும்போது, அந்த கோரிக்கைகளையெல்லாம் நிறைவேற்றிக் கொடுக்கும் அரசாக திகழ்ந்து வருகிறது. மக்களுக்கு முன்னுரிமை அளிக்கக் கூடிய கொள்கையை உடைய அரசாக தமிழ்நாடு திகழ்கிறது என்று நான் படித்திருக்கிறேன். ஆனால் அதனை நான் இங்கு பார்க்கிறேன் என கோவில்பட்டி சார் ஆட்சியர்குறிப்பிட்டார்கள்.
தமிழ்நாடு முதலமைச்சர்மக்களைத் தேடி மருத்துவம், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம், புதுமைப்பெண் திட்டம், தமிழ்புதல்வன் திட்டம் என அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி வருகிறார்கள். அதன் நோக்கம், எல்லாரையும் படிக்க வைக்க வேண்டும் மற்றும் அனைத்து மக்களின் வாழ்வாதாரத்தையும் உயர்த்த வேண்டும் என்ற அடிப்படையில் செயல்படுத்தி வருகிறார்கள்.
இந்தியாவிலேயே தமிழ்நாடு பொருளாதார வளர்ச்சி, தொழில் வளர்ச்சி, தனிநபர் வருமானம், வாழ்வாதார உயர்வு உள்ளிட்டவற்றில் முதன்மை மாநிலமாக திகழ்ந்து வருகிறது. மத்திய நிதியமைச்சர் அவர்களும் பொருளாதார வளர்ச்சியுள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது என குறிப்பிட்டுள்ளார்கள். அந்த வகையில் கடந்த 4 ஆண்டுகளில் சிறப்பாக ஆட்சிபுரிந்து வருகிறார்கள் நம்தமிழ்நாடு முதலமைச்சர் தளபதியார் . இந்த ஸ்கூட்டரினை பெறுகின்ற நீங்கள் அனைவரும் மகிழ்ச்சியுடன் இருப்பீர்கள் என்று கூறிக்கொள்கிறேன் எனசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்பி.கீதா ஜீவன்தெரிவித்தார்கள்.
முன்னதாக, கோவில்பட்டி நேஷனல் பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற நிகழ்வில், கல்லூரி மாணவர்களின் திறன் வளர்ச்சி மற்றும் டிஜிட்டல் முன்னேற்றத்திற்காக " உலகம் உங்கள் கையில்” திட்டத்தில் 750 கல்லூரி மாணவ மாணவியர்களுக்கு மடிக்கணினிகளைசமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர்பி.கீதா ஜீவன்வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் கோவில்பட்டி சார் ஆட்சியர் ஹிமான்ஷீ மங்கள்,மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பிரமநாயகம், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) நாகராஜன், கோவில்பட்டி நகர்மன்ற தலைவர் க.கருணாநிதி, நேஷனல் பொறியியல் கல்லூரி, முதல்வர் முனைவர் காளிதாஸ முருகவேல், கே.ஆர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, முதல்வர் முனைவர் மதிவாணன், பேராசிரியர்கள், மாணவ மாணவியர்கள் மற்றும் அரசு துறைச் சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)