» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)
டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி பள்ளி மாணவ மாணவிகள் சாதனை!
சனி 31, ஜனவரி 2026 10:45:37 AM (IST)

மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் தூத்துக்குடி காமாக்ஷி வித்யாலயா பள்ளி மாணவ மாணவிகள் பதக்கங்கள் வென்று சாதனை படைத்தனர்.
மதுரை மாவட்டம் சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரியில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் நடைபெற்ற குடியரசு தின மற்றும் பாரதியார் தின மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டிகளில் தூத்துக்குடி காமாக்ஷி வித்யாலயா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவி துர்கா ஸ்ரீதேவி 17 வயதுக்குட்பட்ட மாணவிகளுக்கான 46கிலோ எடை பிரிவில் தங்கப்பதக்கமும், மாணவர் ஹரி கோபாலகிருஷ்ணன் 14 வயதுக்குட்பட்ட மாணவர்களுக்கான 38கிலோ எடை பிரிவில் வெண்கல பதக்கமும் வென்றார்
பதக்கம் வென்று பள்ளிக்கும் மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ள இந்த இரு மாணவ மாணவிகள் தேசிய அளவிலான டேக்வாண்டோ போட்டியில் கலந்து கொண்டு தமிழக அரசின் ஃபாம் 4 சான்றிதழ்களை பெற தகுதி பெற்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சேலத்தில் நடைபெற்ற மாநில அளவிலான டேக்வாண்டோ போட்டியில் ஜூனியர் மகளிருக்கான 46கிலோ எடை பிரிவில் வெள்ளிப் பதக்கம் வெற்றி பெற்று ராஜஸ்தான் மாநிலத்தில் நடைபெற்ற 2வது பெடரேசன் கோப்பைகான டேக்வாண்டோ போட்டியில் மாணவி செல்வ ஹரிணி கலந்து கொண்டு பள்ளிக்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்த்துள்ளார்.
வெற்றி பெற்ற மாணவ மாணவிகளையும் பயிற்சியாளர் ராமலிங்க பாரதியையும் பள்ளி செயலாளர் அருணாச்சலம், பள்ளி முதல்வர் மீனாகுமாரி, துணை முதல்வர் சுப்புலட்சுமி, உடற்கல்வி ஆசிரியர் முத்துக்குமார் மற்றும் அனைத்து ஆசிரிய பெருமக்களும் பாராட்டி வாழ்த்தினர்.

மக்கள் கருத்து
மேலும் தொடரும் செய்திகள்

தூத்துக்குடி தொகுதியை மீனவர் சமுதாயத்திற்கே ஒதுக்க வேண்டும்: ஒருங்கிணைப்பு குழு பேட்டி!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:55 PM (IST)

கருகிய மிளகாய் பயிர்களுக்கு உரிய நிவாரணம் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்.
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 9:12:17 PM (IST)

ஆட்டோக்களில் கூடுதல் கட்டணம் வசூல் : ஆட்சியர் நடவடிக்கை எடுக்க கோரிக்கை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:39:12 PM (IST)

தூத்துக்குடி வ.உ.சி. துறைமுகம் 4 மில்லியன் டன் சரக்குகள் கையாண்டு சாதனை!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 8:14:09 PM (IST)

மத்திய கடல் மீன்வள ஆராய்ச்சி நிலையத்தில் மாணவ-மாணவிகள் களப்பயணம்!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:57:58 PM (IST)

பிப்.16ல் திருமண்டல நிர்வாகிகள் தேர்தல்: நிர்வாகி ஜோதிமணி அறிவிப்பு!
செவ்வாய் 3, பிப்ரவரி 2026 7:52:34 PM (IST)