» செய்திகள் - விளையாட்டு » மாவட்ட செய்தி (தூத்துக்குடி)

அரசு பஸ்சை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்

சனி 31, ஜனவரி 2026 8:27:30 AM (IST)



ஏரலில் பள்ளி மாணவிகளை பாதிக்கும் வகையில் தாமதமாக இயக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசு பஸ்சை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தூத்துக்குடி மாவட்டம், ஏரல் பஸ் நிலையம் அருகில் உள்ள அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் பழுதடைந்த இந்த பள்ளிக்கட்டிடம் இடிக்கப்பட்டு, புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இதையடுத்து சிறுத்தொண்டநல்லூர் அரசு முத்துமாலை அம்மன் மேல்நிலை பள்ளியில், 

இந்த பள்ளி மாணவிகள் படிக்க ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இதையடுத்து இந்த பள்ளி மாணவிகள் ஏரல் பஸ் நிலையத்தில் இருந்து இலவசமாக சென்று படித்து வருவதற்கு வசதியாக தினமும் காலை, மாலையில் அரசு ஏற்பாடு செய்யப்பட்டது. 

இந்த பஸ் தினமும் காலையில் தூத்துக்குடியில் இருந்து ஏரல் பஸ் நிலையம் வந்து, காலை 9 மணிக்கு பள்ளி மாணவிகளை ஏற்றி கொண்டு சிறுத்தொண்டநல்லூர் பள்ளிக்கு அழைத்து செல்வதும், மாலையில் பள்ளி விடும் நேரத்திற்கு தூத்துக்குடியில் இருந்து ஏரல் வரும் பஸ்,சிறுத்தொண்டநல்லூர் பள்ளிக்கு சென்று மாணவிகளை ஏற்றி வந்து ஏரல் பஸ் நிலையத்தில் இறக்கி விட்டு செல்வதும் வழக்கமாக இருந்து வந்தது.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக தூத்துக்குடியில் இருந்து வரும் பஸ் தினமும் காலை 9 மணிக்கு பதிலாக 9.15 அல்லது 9.20 மணி என தாமதமாக வந்து மாணவிகளை ஏற்றி சென்றது. இதனால் பள்ளியில் இந்த மாணவிகளுக்கு படிப்பு பாதிக்கப்படுவதோடு, வருகை பதிவேட்டிலும் லீவு ேபாடப்பட்டு வருகிறது. இதனால் பாதிக்கப்பட்ட மாணவிகள், பெற்றோர்களிடம் புகார் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரமடைந்த பெற்றோர்களும், பொதுமக்களும் நேற்று காலையில் தூத்துக்குடியில் இருந்து தாமதமாக ஏரல் பஸ்நிலையம் வந்த அரசு பஸ்சை சிறைபிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தாமிதமின்றி இந்த ்அரசு பஸ்சை இயக்க ேகாஷம் எழுப்பினர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ஏரல் போலீஸ் இன்ஸ்பெக்டர் சபாபதி மற்றும் போலீசார் அப்பகுதிக்கு சென்று பெற்றோர் மற்றும் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். 

அப்போது, நாளை(இன்று) முதல் ஏரலில் இருந்து சிறுத்தொண்டநல்லூர் அரசு பள்ளிக்கு தாமதமின்றி இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் மூம் ஏற்பாடு செய்யப்படும் என போலீசார் உறுதி அளித்தனர். இதை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்களும், பெற்றோரும் கலைந்து சென்றனர். சுமார் 10 நிமிட தாமதத்திற்கு பிறகு மாணவிகளை ஏற்றிக்கொண்டு அந்த பஸ் சிறுத்தொண்டநல்லூர் புறப்பட்டு ெசன்றது.


மக்கள் கருத்து


மக்கள் பதிவு செய்யும் கருத்துகள் தணிக்கையின்றி பிரசுரமாகும் வகையில் மென்பொருள் வடிவமைக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்ப குறைபாடுகள் காரணமாக கருத்துக்கள் பதிவாவதில் சிறிது காலதாமதம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாசகர்களின் கருத்துக்களுக்கு நிர்வாகம் பொறுப்பாக மாட்டார்கள். நாகரீகமற்ற மற்றும் பிறர் மனதை புண்படுத்தகூடிய கருத்துகளை / வார்த்தைகளைப் பயன்படுத்துவதை தவிர்க்கும்படி கேட்டுக்கொள்கிறோம்.

ஆங்கிலத்தில் தட்டச்சு செய்ய Ctrl+G -ஐ அழுத்தவும்.



மேலும் தொடரும் செய்திகள்

K.CHINNADURAI & CO AND GOLD HOUSE

Sponsored Ads




Arputham Hospital

CSC Computer Education





Thoothukudi Business Directory